search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Pregnancy Care"

  ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
  மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

  தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

  இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும்.

  இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது.

  இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும். இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

  இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

  கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட்கொண்டால் பிரசவ வலி குறையும். ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
  கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும்.
  கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். இது தனிப்பட்டவர்களிடையே மாறுபடும். அதாவது, ஒவ்வொருவர் ஒவ்வோர் அளவு எடை கூடுவர். சராசரியாக எடை ஐந்திலிருந்து ஒன்பது கிலோ வரை அதிகமாகும். எடை கூடுதல் கர்ப்பத்தின் முதர்வைப் பொறுத்து மாறுபடும். முதல் மூன்று மாதங்களில் வாந்தியும் பசியின்மையும் இருந்தால் கணிசமான எடை கூடுதல் இருக்காது. கர்ப்ப காலத்தின் இரண்டாம் கட்டத்தில், ஒரு வாரத்திற்கு அரை கிலோ எடை கூடி மொத்தமாக மூன்றரை முதல் நாலரை கிலோ வரை எடை கூடும். மேலும், பிரவசத்திற்கு முன் அரை கிலோவிலிருந்து ஒன்றரை கிலோ வரை எடை குறையும்.

  கர்ப்ப காலத்தின் எடை கூடுதல், கருவின் எடையைப் பொறுத்து இருக்கும். கர்ப்பத்தின்போது மொத்த உடல் நீரின் அளவு ஏழு லிட்டர் வரை அதிகரிக்கும். மேலும், கடைசி கட்டத்தில் சிறுநீரகங்கள் அதிக அளவு உட்கொள்ளக்கூடிய தண்ணீரை வெளியேற்ற சிரமப்படும். பொதுவாக ஒரு சராசரி பெண் கர்ப்ப காலத்தில் அவளின் அசலான எடையிலிருந்து பத்து சதவீதம் எடை கூடுவாள். ஆரம்பத்தில் அதிக குண்டான பெண்கள் ஒல்லியானவர்களைக் காட்டிலும் எடை கூடுவார்கள். கணுக்கால்களிலும், கால்களிலும் வீக்கமேற்படுவது சாதாரணமாக நிகழக்கூடியதே. இது சாதாரணமாக மாலை நேரங்களில் ஏற்பட்டு சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்தால் மறைந்துவிடும். இது கால்களில் இருக்கும் இரத்தச் சிரைகளில் ஏற்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடியதாகும்.

  ஜீரண செயல்பாடுகளின் மாறுதல்கள்

  அதிகபட்சமான பெண்கள் வாந்தி வருவதைப்போன்ற உணர்வு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை இருப்பதாகச் சொல்வார்கள். குடல் அசைவுகள் குறைதல், குடல் சரப்பு நீர்கள் சுரத்தலின் அளவு குறைதல் கல்லீரல் செயல்திறனில் மாறுபாடு போன்றவை இருக்கும். பசியும் உணவுப் பழக்கங்களிலும் மாறுபாடு இருக்கும். சில உணவுப் பொருட்களின் மீது விருப்பமும் அதிகப் பற்றும் இருக்கும். கர்ப்ப காலத்தில் பல் சொத்தை ஆவதற்கு வாய்புகள் அதிகம். நெஞ்செரிச்சல், வயிற்று அமிலம் மேல்நோக்கி வருவதால் ஏற்படும்.

  எலும்புக்கூடு, தோல் மற்றும் பல்லில் ஏற்படும் மாறுதல்கள்

  கர்ப்ப காலத்தல் எலும்புகளுக்கு அதிகமாக இரத்த ஒட்டமிருக்கும். இடுப்பு எலும்புகள் அதிகமாக அசைவதோடு நடப்பதற்கு சிரம மேற்படுத்தும். தோலில் சில இடங்களில் அதிக நிறச்சேர்க்கை ஏற்பட்டுவிடும். மார்புக்காம்பு, பிறப்புறுப்பு, தொப்புள், முகம் போன்ற பகுதிகளில் நிறச்சேர்க்கை இருக்கும். கால்சியம் சத்துக் குறைவால் பற்கள் சீக்கிரமாகச் சொத்தையாவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும், வளரும் சிசுவுக்கும் கால்சியம் தேவையும் அதிகமாக இருப்பதால் தாய்க்குக் கால்சியம் குறைபாடு ஏற்படும்.

  சிறுநீரக மண்டலத்தில் பல மாறுதல்கள் ஏற்படுவதோடு சிறுநீரில் சர்க்கரை வெளியேறவும் வாய்ப்புகள் உண்டு. நரம்பு மண்டல மாறுதல்களால் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாய் இருப்பர். பய உணர்வு, கவலை போன்றவை அதிகமாக இருக்கும்.

  கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
  கர்ப்ப காலத்தில் உடல் நலன் மீது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் நலம்தான் சிசுவின் நலனும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தின்போது சந்திக்க நேரிடும் உடல் பிரச்சனைகளில் மூல நோயும் ஒன்று. ஏற்கனவே மூலம் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது அதன் படிநிலை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

  ‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.

  இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும்.  இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.

  கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த சோகை வருவது மிகவும் இயல்பானதுதான். ஏனென்றால் குழந்தைக்கு புதிய அணுக்களை தயாரிப்பதற்காக தாயின் ரத்தம் செலவிடப்படும். இதனால் இரும்புச் சத்து முற்றிலும் குறைந்து போய் விடும். 30 சதவிகிதம் வரை கர்ப்பிணிகளுக்கு இரத்தசோகை ஏற்படலாம். இதைத்தவிர அவர்களுக்கு மூலநோய் இருக்கும் நிலையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை அதிகரித்து விடும்.
  கர்ப்பமான காலத்தில் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது இயல்பானது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.
  கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என ஆசைகள் இருப்பது அனைத்து பெண்களுக்கும் இயல்பாக தோன்றகூடியது.. அவ்வாறு பயணம் செய்யும் காலத்தில் எந்த வகையில் உங்களை பாதுகாக்கலாம். இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

  கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே பயணம் செய்துக் கொள்ளலாம்.. இந்த கால இடைவெளியில் உள்ள பெண்கள் காலை நேரத்தில் அதிக சுறுசுறுப்புடனும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுதால் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது அனைத்து சூழ்நிலைகளையும் அவர்களால் எதிர்க்கொள்ளக்கூடிய ஆற்றல் இரண்டாவது முதல் ஆறாவது மாதம் உள்ள கர்ப்பிணிகளுக்கு இருக்கும்.

  கர்ப்பமான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது குழந்தை அழிவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது உங்கள் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.

  நீங்கள் கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது சுவாதினம் இல்லாத குழந்தை பிறக்க நேரிடலாம், கரு தவறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.. ஒரு வேளை உங்களுக்கு இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்ய முடிவெடுக்க வேண்டும்.

  கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் அல்லது புணர்புழை இரத்த ஒழுக்கு, கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம்.

  பயணம் பற்றி யோசிக்கும் போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். சில கர்ப்பிணிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதால் கால்வீக்கம், பசியின்மை, தளர்வு ஏற்படும். மேலும் தேவையான மருந்துக்களை எடுத்து கொண்டு பயணம் செய்யலாம். பயணம் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொண்டு பயணியுங்கள்..
  கர்ப்பிணிகளுக்கு வரும் எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும்.
  கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்  ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

  நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

  கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

  இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

  முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

  அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

  மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.  பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

  இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

  கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

  எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

  சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

  கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

  அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.
  கர்ப்ப காலத்தில் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற அறிகுறிகளை சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
  தலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். எல்லாம் எல்லாருக்கும் வர வேண்டும் என்றில்லை. அப்படிப் பிரச்னைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

  கர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

  இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற  உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.  கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.

  கர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.

  சில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.
  சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள், தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடையும் உண்மையை ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.
  காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாக செலுத்தி வருகின்றன. சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன.

  பிறக்கும் குழந்தைகளையும், கருவில் வளரும் குழந்தைகளையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டு வைக்கவில்லை. பிறக்கும் குழந்தையின் உடலில் 200-க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வாஷிங்டனில் இருந்து செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது என்கிறது.

  குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட, பிறகு அதிலிருந்து ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்த போது, அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்யப்பட்ட தொழிலக வேதிப்பொருட்கள், ஒட்டாத டெப்லான் வகை வேதிப்பொருட்கள், துரித உணவை அடைக்கும் பெட்டி உற்பத்தி, ஆடை உற்பத்தி போன்ற தொழில்களில் எண்ணெய் பிசுக்கை நீக்கும் பெர்ப்ளோரோ வேதிப்பொருட்கள் போன்றவை தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்தன. அந்த வகையில் 413 செயற்கை வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

  இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன.

  சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள், தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடையும் உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பிறந்தது முதல் சுவாசத்தைக்கூடத் தொடங்காத சிசுவின் உடலை, அபாயகரமான வேதிப்பொருட்களின் குப்பைக் கூடையாக்கி இருப்பது அறம் சார்ந்த அறிவியல் வளர்ச்சி காணாமல் போய்விட்டதைக் காட்டுகிறது. 
  கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம்.
  இப்போதைய சூழலில் கர்ப்பிணியை மனதளவில் தயார்படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

  கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப்பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

  கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.

  * கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

  * போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.

  * புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

  * உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

  * கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.

  * வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  * எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம்     இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

  * பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

  * சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
  பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.
  பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

  பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அம்மாக்கள் சாப்பிடும் உணவு செரித்த பின்னர், அதன் சத்துகள்தாம் தாய்ப்பாலின் மூலமாகக் குழந்தைக்குச் சென்றடையும் என்பதால், குழந்தையின் செரிமானத்துக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாலூட்டும் பெண்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். மலக்கட்டுப் பிரச்சனையை ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட்ஸ், பிஸ்கட், பிரெட் போன்ற உணவுகளைப் பிரசவம் முடிந்த முதல் 15 நாள்களுக்குத் தவிர்த்துவிடுவது நல்லது. நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் அருந்துவது பால் சுரப்பைச் சீராக வைத்திருக்கும்.

  தளர்வான பருத்தி ஆடைகளே பாலூட்டும் தாய்க்கு நல்லது. வேலைப்பாடுகள்கொண்ட ஆடைகள் குழந்தையைத் தூக்கும்போது, அதன் மென்மையான சருமத்தை உரசிப் பதம்பார்க்கும். ஃபீடிங் நைட்டி, வெளியே செல்லும்போது ஃபீடிங் குர்தி என அணிவது பாலூட்ட வசதியாக இருக்கும்.

  இரவெல்லாம் விழித்திருந்து குழந்தைக்குப் பாலூட்டுவது, தொட்டில் ஆட்டுவது, டயப்பர் மாற்றுவது போன்ற பொறுப்புகளால் தாயின் தூக்கம் பறிபோகும். உறக்கமின்மையால் கோபம், பசியின்மை போன்றவை ஏற்படும். அடுத்தகட்டமாக ஸ்ட்ரெஸ்கூட ஏற்படலாம் என்பதுடன், ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகப் பால் சுரப்பு குறையலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க, குழந்தை உறங்கும்போதெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

  குழந்தையைப் பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையைத் தூக்குவதை, கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சுவதை, முத்தம் கொடுப்பதை எல்லாம் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தையை ஒருவரின் கைகளில் தர நேர்ந்தால், முன்னதாக அவர் கைகழுவ, ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்த வைக்கவும். வீட்டில் இருக்கும் நேரங்களில் குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தையின் உடைகளை நன்கு அலசி, வெயிலில் உலரவைத்துப் பயன்படுத்தவும்.

  பிரசவத்துக்குப் பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது டாக்டர் பரிந்துரைத்த கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். குழந்தை பிறந்த 15 நாள்களுக்குப் பின்னர், மகப்பேறு மருத்துவரிடம் ஒரு செக்கப் செய்துகொள்ளவும். மன அழுத்தத்துக்குள்ளானால், கவுன்சலிங் பெறுவது நல்லது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு தாம்பத்யத்தைத் தவிர்க்கவும்.
  கர்ப்பகாலத்தில் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்சனைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.