என் மலர்

  நீங்கள் தேடியது "women health Problem"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம்.
  • இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

  நம் நாட்டில் கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு மட்டும் இல்லை, அது குறித்து எண்ணற்ற தவறான நம்பிக்கைகளும், கருத்துகளும் உள்ளன. சிலர் அதைப் பாவம் என நினைக்கிறார்கள். சிலர் அதை இன்பத்துக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்கள்.

  பொதுவாக, கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்றுவகைப்படும். தற்காலிக முறைகளில் காண்டம் எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளைவுகள், ஸ்பெர்மசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும் நிரந்தர முறையில் டியூப்பக்டமி, வாசக்டமி ஆகியவையும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை மற்றவை பெண்களுக்கானவை

  காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம். மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப்

  படும் கருத்தடை சாதனம் இது. இது பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது.

  ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். காப்பர் டி தோல்வி அடைய 1 சதவிகித வாய்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

  கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும். மேலும், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து, விந்து உட்செல்வதையும் தடுக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பான கருத்தடை சாதனம் இது.

  ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ள இம்ப்ளான்ட் சாதனம் இது. சிலருக்கு ஒவ்வாமையை

  ஏற்படுத்தக்கூடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி.
  இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி. அதுவும் முதுமையில் மூட்டுவலி என்பது மிகவும் கொடுமை. மூட்டுவலி ஏன் வருகிறது. மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைதல், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் வரும் வாதம் போன்ற காரணங்களாலும் மூட்டு தேய்மானம் அடைந்து, அதன் காரணமாக மூட்டுவலி ஏற்படும். இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பது வயது காரணமாக ஏற்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானம் தான். முதல் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது.

  பெண்களின் அதீத எடையால் முழங்கால் மூட்டுக்குச் செல்லும் பாரம் அதிகரித்து, எலும்புத் தேய்மானம் ஏற்பட காரணமாகிறது. பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு நின்றுவிடுவதால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தடைபடுகிறது. அதனால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகிறது.  மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மூட்டெலும்பு வளைந்து போனால் செயற்கை மூட்டு பொருத்துவார்கள். இது உடலுக்கு எந்த ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது. இந்த வகையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட வருடங்கள் பலன் தரும். உடல் உயரத்துக்கு ஏற்ற மிகச் சரியான எடையில் இருத்தல், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க நடைபயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றோடு மாதம் ஒருமுறை பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டக்ஸ்) அளவை கண்காணிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள், பருப்பு, நட்ஸ், பழங்கள், வைட்டமின் டி நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

  மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பக் கட்ட மூட்டு தேய்மானத்தை மட்டும் உணவு பழக்க வழக்கத்தால் சரிப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்வை குடும்பத்தாருக்கு அளிக்கும் வயதான பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை தொடரலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு குழந்தை எடை குறைவோடோ, ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
  கருவுற்றிருக்கும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது. இதனை நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். ஒரு குழந்தை எடை குறைவோடோ அல்லது ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

  1. முழுமையாக 37 வாரங்கள் முடிவதற்கு முன்னரே குழந்தை சில சமயம் பிறப்பதால் எடை குறைவு ஏற்படக்கூடும். அதாவது குழந்தை குறை மாதத்தில் பிறந்துவிடுவது. இதற்குக் காரணம் தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்திலே போதிய எடை வளர்ச்சியை அடையும். இது நிகழாத போது, குழந்தையின் எடை நிச்சயம் குறைவாகத் தான் காணப்படும்.

  2. ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கருவில் சுமக்கும் போது இத்தகைய எடை குறைவு ஏற்படக்கூடும். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தால் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு கிடைக்காமல் 2500 கிராமிற்கும் கீழே எடை குறையக்கூடும். ஏனென்றால் ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய சத்துக்கள் இன்னொரு குழந்தைக்குச் சென்று விடலாம். அதனால் ஏதாவது ஒரு குழந்தை பலவீனமாக இருக்கலாம் அல்லது ஏனைய குழந்தைகளும் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.ஆக இந்தக் குழந்தைகள் பிறக்கும்போது எடைக் குறைவோடே காணப்படுவார்கள்.

  3. கருவுற்றிருக்கும் தாய் அதிக இரத்தக் கொதிப்போடு பிரசவ காலத்திலிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கக் கூடும். இதனால் குழந்தை குறைந்த எடையோடு பிறக்கக்கூடும். இதனைத் தவிர்க்கத் தாய் கர்ப்பகாலத்தில் அமைதியான மனநிலையோடு இருப்பதோடு ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதும் நல்லது.அதே கருவில் வளரும் குழந்தையின் எடை வளர்ச்சிக்கு நல்லது.

  4. கருவுற்றிருக்கும் பெண் புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் வாழ்க்கைமுறைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது குழந்தையின் எடை குறைபாட்டிற்குக் காரணம். மேலும் பதப்படுத்திய உணவுகளை உண்பது, துரித உணவுகளை அதிகம் உண்பது போன்ற விசயங்கள் எல்லாம் குழந்தைக்குப் போதுமான பிராண வாய்வு கிடைக்காமலும் போதிய சத்து கிடைக்காமலும் போகும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் கருவில் இருக்கும் குழந்தை எடை குறைவோடு பிறக்கும் சதவீதம் அதிகம்.

  5. கருவுற்றிருக்கும் தாயிற்கோ அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கோ சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் கர்ப்ப காலத்தில் உள்ளது. இதனால் குழந்தை பிறக்கும் போது எடை குறைவு அல்லது அதீத எடை போன்ற பிரச்சனைகளோடு பிறக்கக்கூடும்.இதைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் உணவு மேலாண்மையைக் கையாள வேண்டும்.  6. கருவுற்றிருக்கும் தாய்க்குக் கருப்பையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். இதனால் வேறு பல பிரச்சனைகளும் குழந்தைக்கு ஏற்படக்கூடும். இது மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் மிக முக்கியம்.

  7. கருவுற்றிருக்கும் தாய் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக சத்தான கீரை வகைகள், பழங்கள், காய் மற்றும் பசும் பால் போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை சீரான உடல் எடையோடு பிறக்கும்.

  8. தாய் கருவுற்றிருக்கும் போது தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை பிறக்கும் போது உடல் எடை குறைபாட்டோடு பிறக்கக்கூடும். இதனால் கர்ப்ப காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் தாயிற்கு ஏற்படும் எந்த வித நோய்ப் பாதிப்புகளும் கருவில் வளரும் குழந்தையையும் தாக்குகின்றன. இதன் விளைவாக அந்த குழந்தை பிறக்கும் போது உடல் எடை குன்றியே காணப்படுகிறது.

  9. சரியான பருவத்தில் தாய் கருவுற வேண்டும். குறைந்த வயதிலோ அல்லது அதிக வயதிலோ ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற எண்ணினால், அதுவும் உங்கள் குழந்தை எடை குறைபாட்டோடு பிறக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். அதனால் பெண்கள் இயன்ற வரை உரிய வயதில் தாய்மை கொள்வது நல்லது.

  10. கருவுற்றிருக்கும் பெண் முடிந்த வரை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் தனது கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டும். தாய் மனச் சோர்வோடும் மன அழுத்தத்தோடும் இருந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக் கூடும். ஆக தாய் மனத் தெளிவோடு எந்த ஒரு விசயத்திற்கும் கவலை கொள்ளாது தன் கர்ப்ப காலத்தைக் கழித்தால் பிறக்கும் குழந்தை போதிய எடையோடு நிச்சயம் இருக்கும்.

  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் புரிந்து கொண்டு தன் குழந்தை சரியான உடல் எடையோடும் ஆரோக்கியத்தோடும் பிறக்க உதவ வேண்டும். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  பெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப்பு. தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது என மாறிப்போன வாழ்க்கை முறையால் இப்போது இளம் வயதிலேயே நீரிழிவு நோய் தாக்குகிறது. நீரிழிவு நோய்க்கும் மலட்டுத் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

  குடும்ப பின்னணியில் நீரிழிவு இருந்தால் அந்த வழியில் வருவோருக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்போது பி.சி.ஓ.டி. என்னும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது என்று அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

  இவர்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம். தைராய்டு ஹார்மோன், சினைப்பைகளில் இருந்து சுரக்கிற எப்.எஸ்.எச். திரவம், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின், இதுவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம்.

  நீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் கருத்தரிப்பது க‌‌ஷ்டம். அப்படியே கருத்தரித்தாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வரும். பிரசவமானதும் அது தானாக போய்விடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பி.சி.ஓ.டி. பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் நீழிரிவு நோய் நிரந்தரமாக உடம்பில் தங்கலாம். கருத்தரிக்கும்போது அது தாயை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.

  முறையற்ற மாதவிலக்கு, உடம்பெல்லாம் முடி வளர்ச்சி, தாறுமாறாக எகிறும் உடற்பருமன் இதுவெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே ஸ்கேன் மூலமாக பி.சி.ஓ.டி. பிரச்சினை இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது நல்லது. எடைக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு நோய் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
  யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

  பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.

  இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

  கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.  1. அசாதாரண ரத்தப்போக்கு

  கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

  2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்

  சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.

  3. உடலுறவின்போது வலி

  பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
  மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

  தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

  இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும்.

  இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது.

  இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும். இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

  இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

  கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட்கொண்டால் பிரசவ வலி குறையும். ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
  உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.

  தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.

  அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.

  அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும்.

  இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.
  பிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது.

  6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். மருத்துவர் அனுமதித்தால் 5-6 வது மாத தொடக்கத்தில் சிறிதளவு திட உணவு தரலாம். 6 மாதத்துக்கு மேல் கட்டாயம் தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு தர வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். நோய் தாக்காது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

  தாய்ப்பாலை நிறுத்துவதை எப்போதிலிருந்து தொடக்கலாம்?

  ஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கட்டாயம். ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை சிறிதளவு குறைத்துக்கொண்டு திட உணவை அதிகப்படுத்துங்கள். திட உணவு என்றவுடன் எடுத்த உடனே சாம்பார் சாதம் தருவது இல்லை. கொழகொழப்பான உணவு, நீர்த்த உணவு, திரவமே சற்று கெட்டி தனமாக இருப்பது இப்படியெல்லாம் 6 வது மாதத்திலிருந்தே குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

  ப்யூரி, கஞ்சி, கீர், கூழ், ஸ்மூத்தி, ஜூஸ், சூப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். களி உணவுகளைக் கொடுக்கலாம். குழைத்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவைத் தரலாம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி உணவுகள் தரலாம். பாயாசம், ஃபிங்கர் ஃபுட்ஸ், சப்பாத்தி, பராத்தா கொடுக்கலாம். படிப்படியாக உணவை அறிமுகப்படுத்துவதுதான் சிறந்தது.

  அதிக குளிர்ச்சியாகவோ அதிக சூடாகவோ இல்லாமல் இளஞ்சூடான பக்குவத்தில் உணவைத் தர வேண்டும். சுவையானதாக உணவு இருப்பது மிகவும் முக்கியம். அதுபோல சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.

  தாய்ப்பால் நிறுத்த என்ன செய்யலாம்?

  தாய்ப்பாலை திடீரென்று ஒருநாள் அப்படியே நிறுத்தி விட கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும்.

  தாய்ப்பால் கொடுக்காத இடைவேளிகளில் திட உணவுகளையோ திரவ உணவுகளையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே வருகையில், இறுதியில் தாய்ப்பால் நிறுத்த வேண்டும்.

  குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது?


  ஒரு வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒன்றரை வயதுக்கு மேல் இருமுறை கொடுத்தாலும் தாய்ப்பாலின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

  குழந்தையை விளையாட்டில் கவனம் செலுத்த வையுங்கள். 2 வயது முடியும் கட்டத்தில் ஒரு வேளை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். நீ வளர்ந்து விட்டாய் இனி தாய்ப்பால் உனக்கு தேவையில்லை என அடிக்கடி குழந்தைக்கு சொல்லலாம்.

  பின்னர் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக வாரத்துக்கு 5 நாள் மட்டும் கொடுங்கள். பின்னர் அதையே 3 நாள் என மாற்றிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுப்பது போல மாற்றுங்கள்.பின்னர் அதையும் நிறுத்திவிடுங்கள். இப்படி படிப்படியாக குறைப்பது நல்லது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைப்பது, எத்தனை நாட்கள் வரை சேமித்து வைப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
  குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.

  வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும். தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.

  ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், வெளியில் தாய்ப்பாலை வைக்க நினைக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது....

  தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

  இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் சேகரிக்க நினைக்கிறீர்கள் என்றாலோ அடுத்த நாளுக்கு தாய்ப்பால் சேகரிக்க வேண்டுமென்றாலோ நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம். இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும்.

  ஒரு வாரம் நீங்கள் எதாவது அலுவல் ரீதியாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

  10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்சனைகான தீர்வுகளை பார்க்கலாம்.
  இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப்பார்க்கலாம்.

  முதுகு வலி


  நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள்.

  சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.

  சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.

  நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.

  உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.

  சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.

  தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.

  சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம்.

  வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.

  கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.

  மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது.

  திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம்.

  உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.  தீர்வுகள் :

  நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

  உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.

  ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

  முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.

  உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது.

  அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது.

  உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

  முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
  கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

  அடினோமையாசிஸ் என்றால் என்ன:-

  கர்ப்பப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் வெளியே உள்ள பகுதி சீரோசா என்றும் உள்ளே உள்ள உள்பகுதி எண்டோமெட்சியம் என்றும் மத்தியில் உள்ள பகுதி மையோ மெட்ரியம் என்றும் பிரிக்கப்படுகிறது.

  கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் சிதைந்து மையோமெட்ரியம் பகுதிக்கு சென்று கட்டியாக மாறுவது.

  அடினோமையோசிஸ் வகைகள்:-

  1. கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்படுவது டிபியூஸ் வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் பெரும்பான்மையான பகுதி பாதிக்கப்படு கிறது.

  இன்னொரு வகைக்கு லோக்கலைஸ்டு வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் எல்லா பகுதியும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறிப்பாக கர்ப்பப்பையின் பின்பகுதியை பாதிக்கிறது.

  அடினோமையோசிஸ் ஒரு பெண்ணிற்கு இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.  இந்நோயின் அறிகுறி:-

  அதிக இரத்தப் போக்கு ஏற்படுதல், அடிவயிற்றின் வலி குறிப்பாக மாதவிடாயின் போது அடி வயிற்றில் வலி ஏற்படுதல், குழந்தை பேறுயின்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், அடி வயிற்றில் கட்டி தென்படுதல்

  இதனுடைய பரிசோதனை முறைகள்:-

  அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் MRI ஸ்கேன் மற்றும் பையாப்சி (Biopsy) மூலம் உறுதிபடுத்தி கொள்ளலாம்.

  சிகிச்சை முறைகள்:-

  ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மூலம் சரி பண்ணிபார்க்கலாம். இதில் சரியாகவில்லை என்றால் முன்பு (Open) சாதாரண முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

  இப்போது அடினோ மையோசிஸ் கட்டிகள் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.

  ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருந்தும் தாங்கமுடியாத வலி, அதிகபடியான இரத்தப்போக்கு இருந்தால் சில சமயங்களில் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

  அதுவும் இப்பொழுது நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

  சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print