என் மலர்

  நீங்கள் தேடியது "Joint Pain"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி.
  இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி. அதுவும் முதுமையில் மூட்டுவலி என்பது மிகவும் கொடுமை. மூட்டுவலி ஏன் வருகிறது. மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைதல், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் வரும் வாதம் போன்ற காரணங்களாலும் மூட்டு தேய்மானம் அடைந்து, அதன் காரணமாக மூட்டுவலி ஏற்படும். இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பது வயது காரணமாக ஏற்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானம் தான். முதல் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது.

  பெண்களின் அதீத எடையால் முழங்கால் மூட்டுக்குச் செல்லும் பாரம் அதிகரித்து, எலும்புத் தேய்மானம் ஏற்பட காரணமாகிறது. பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு நின்றுவிடுவதால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தடைபடுகிறது. அதனால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகிறது.  மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மூட்டெலும்பு வளைந்து போனால் செயற்கை மூட்டு பொருத்துவார்கள். இது உடலுக்கு எந்த ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது. இந்த வகையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட வருடங்கள் பலன் தரும். உடல் உயரத்துக்கு ஏற்ற மிகச் சரியான எடையில் இருத்தல், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க நடைபயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றோடு மாதம் ஒருமுறை பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டக்ஸ்) அளவை கண்காணிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள், பருப்பு, நட்ஸ், பழங்கள், வைட்டமின் டி நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

  மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பக் கட்ட மூட்டு தேய்மானத்தை மட்டும் உணவு பழக்க வழக்கத்தால் சரிப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்வை குடும்பத்தாருக்கு அளிக்கும் வயதான பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை தொடரலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்சனைகான தீர்வுகளை பார்க்கலாம்.
  இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப்பார்க்கலாம்.

  முதுகு வலி


  நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள்.

  சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.

  சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.

  நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.

  உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.

  சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.

  தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.

  சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம்.

  வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.

  கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.

  மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது.

  திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம்.

  உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.  தீர்வுகள் :

  நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

  உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.

  ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

  முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.

  உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது.

  அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது.

  உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

  முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
  மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். கட்டை விரலில் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆய்வுகளின் படி 40 வயதினை கடந்தோருக்கு இது ஏற்படுகின்றது.

  ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு கூடுதலாக ஏற்படுகின்றது. கட்டை விரலின் அடிப்பகுதியில் ஏற்படும் இப்பாதிப்பு கார்டிலிலேஜ் தேய்மானம் காரணமாக ஏற்படுகிறது. எதனையாவது கைகளில் எடுக்க முயலும்போது விரலில் வலி ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறியாக வெளிப்படும். மேலும்

  கட்டை விரலின் அடியில் வீக்கம்
  வலி, விரல் அசைப்பதில் கடினம்
  விரலில் பலமின்மை போன்றவை இருக்கலாம்.

  தேய்மானம் காரணமாக இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால் எலும்பு எளிதில் உடையும் அபாயமும் அதிகம் ஆகின்றது. மருத்துவர் பரிசோதனைகள் மூலம் பாதிப்பினை உறுதி செய்வார்.

  கட்டை விரல் பாதுகாப்பு

  * விரல்களுக்கான பயிற்சி
  * வீக்கம் குறைவதற்கான மருந்துகள்
  * அதிக கடின வேலை விரலுக்கு அளிக்காமை ஆகியவை மூலம் விரல் பாதுகாக்கப்படுகின்றது.
  * சில நேரங்களில் சிகிச்சை பயன் அளிக்காத போது அவசியம் ஏற்படின் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

  வைட்டமின் ஏ.சி.இ. இவைகள் வீக்கத்தினைக் குரைத்து மூட்டு அசைவுகளை எளிதாக்கும். மருத்துவ ஆலோசனை பெற்று இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

  கொலஸ்டிரால் அதிகமாக இருப்பின் மருத்துவ உதவியோடு அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். கால்ஷியம், வைட்டமின் டி சத்து இவைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

  மீன், ஆலிவ் எண்ணெய், பால், தயிர், சீஸ், அடர்ந்த பச்சை நிறம் கொண்ட கீரைகள், காய்கறிகள், பிரோகலி, கிரீன்டீ, பூண்டு, கொட்டைகள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு மூட்டுகளுக்குக் கிடைக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம்.
  வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

  * ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஆப்பிள் வினிகருடன் தண்ணீர் சேர்த்தும் பருகிவரலாம்.

  * இஞ்சியும் மூட்டு வலியை விரட்டியடிக்கும். இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டுவலி கட்டுப்படும். இஞ்சியை டீயாக தயாரித்தும் பருகிவரலாம். நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

  * இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம். பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகிவரலாம். இவ்வாறு செய்தால் மூட்டுவலி கட்டுப்படும்.

  * எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மூட்டு வலிக்கு வீட்டிலேயே செய்து கொள்ள கூடிய எளிய மற்றும் விரைவில் பலன் தரும் ஆய்வு ரீதியான உதவிகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  மூட்டு வலிக்கு வீட்டிலேயே செய்து கொள்ள கூடிய சில ஆய்வு ரீதியான உதவிகள்:

  * இஞ்சிக்கு மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் சமையலில் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். சில மெல்லிய துண்டுகள் இஞ்சியினை 2 கப் நீர் 15 நிமிடங்கள் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள்.

  * சோம்பு, பூண்டு இவற்றினை உணவில் சேருங்கள்.

  * கைகளுக்கு, விரல்களுக்கு வேலை கொடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீரில் கையை வையுங்கள். பின்னர் சிறு சிறு சாமான்களான தட்டு, டம்ளர் இவற்றினை நீங்களே நன்கு சுத்தம் செய்யுங்கள். வலியும் குறையும். வேலை செய்வதால் உங்கள் தன்னம்பிக்கை கூடும்.

  * தவிடு ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம் இவைகளை வீட்டிலேயே செய்து கொள்ளலாமே.

  * காய்கறி, முழு தானியம், பழங்கள், வெங்காயம், மீன் இவை வீக்கத்தினை குறைக்கும் உணவுகள் ஆகும்.

  * முடிந்தால் நீச்சல் செய்யுங்கள்.

  * க்ரீன் டீ 2 கப் தினமும் சாப்பிடுங்கள்.

  * எலுமிச்சை, நெல்லி அதாவது வைட்டமின் ‘சி’ சத்து தினமும் தேவை.

  * சாப்பிட்ட பிறகு ஒரு கிராம்பு மெல்லுங்கள்.

  * ஓமேகா 3 மருத்துவ ஆலோசனை படி எடுத்துக் கொள்ளுங்கள்.

  * வீட்டினுள் வெறும் காலில் நனங்கள்.

  * கால்ஷியம் மாத்திரை தேவையா என்பதனைப் பற்றி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

  ஓமம்:- ஆங்கில முறை மருத்துவம் என்றால் அதில் அறிவுறுத்தும் உணவு நிபுணர்கள் பூண்டு, மஞ்சள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் ஓமம் இன்று அறிவுறுத்தப்படுகின்றது. இதன் மருத்துவ குணங்களான கிருமி நாசினியும், பூஞ்ஞை நாசினியும் வெகுவாய் மருத்துவ உலகம் அறிந்து சிபாரிசு செய்கின்றது. இதனை டீ போல் நீரில் கொதிக்க வைத்து குடிக்க

  * சிறுநீர் நன்கு செல்லுதல் (ஆனால் சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று செய்யவும்)

  * பல் பாதிப்பின்மை

  * ஜீரணம் சீராய் இருத்தல்

  * மனச் சோர்வின்றி இருத்தல்

  * உடல்வலி இன்றி இருத்தல்

  * உள் வீக்கங்கள் குறைதல்

  ஆகியவை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

  2 க்ளாஸ் நீரில் 1/2 டீஸ்பூன் ஓமம் போட்டு டீ போல் கொதிக்க வைத்து வாரம் இரு முறை டீக்கு பதிலாக அருந்தலாமே. 
  ×