என் மலர்

  நீங்கள் தேடியது "Body Pain"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.
  • சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும்.

  நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது.

  செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல் முறை மற்றும் சிலவிதமான உடற்பயிற்சிகளால் ஓரளவு வரை கழுத்து வலியை கட்டுப்படுத்தலாம்.

  உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். கழுத்தை லேசாக அசைத்து கழுத்து தசைகளை இலகுவாக்குங்கள்.

  எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள். நிமிர்ந்த நிலையில் இருக்க துணைபுரியும் குஷன் அல்லது தலையணையை அதற்காக பயன்படுத்துங்கள்.

  கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது கண்களுக்கு நேராக ஸ்கிரீன் வரும்விதத்தில் மானிட்டரை அமைத்திருங்கள். கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்தினால், இடை இடையே கண்களுக்கும், கழுத்திற்கும் லேசான பயிற்சி கொடுங்கள்.

  தூங்கும்போது உயரம் குறைந்த தலையணையை பயன்படுத்துங்கள்.

  அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், தலையை ஒருபுறமாக சாய்த்துவைக்கும் நிலையை தவிர்த்திடுங்கள்.

  படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.

  பஸ்சிலோ இதர வாகனங்களிலோ நீண்ட நேரம் பயணிக்கும்போது `நெக் காலர்' பயன்படுத்துங்கள்.

  வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தை கடக்கும்போதும் கழுத்தை நான்கு முறை வட்டமாக சுற்றுங்கள். தலையை குனிந்து தாடை நெஞ்சில்படும் விதத்தில் பத்து வினாடிகள் வையுங்கள்.

  இடது பக்க காதை இடது தோளில் சாயுங்கள். 10 வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, அதுபோல் வலது பக்க காதை வலது தோளில் சாய்த்து செய்யுங்கள்.

  செல்போனில் பேசி முடித்ததும் தலையை வலது, இடது புறமாக சில தடவை திருப்புங்கள்.

  தலையை மெதுவாக வட்டத்தில் சுற்றுங்கள்.

  வலியை கட்டுப்படுத்தும் வழிகள்:

  * கழுத்து வலிக்கும்போது அந்த இடத்தில் சுடுநீர் நிரப்பிய பேக்கைவைத்து ஒத்தடம் கொடுங்கள். வலி கட்டுப்படும்.

  * காட்டன் துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து கழுத்தை சுற்றி இலகுவாக கட்டிவைத்தாலும் வலி குறையும்.

  * நேராக பார்த்தபடி தலையை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி கொண்டு வாருங்கள்.

  * தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டியபடி தாடை நெஞ்சில் படும் அளவுக்கு குனியுங்கள்.

  * முடிந்த அளவு தலையை உயர்த்தியும், பின்பு தாழ்த்தியும் பத்து முறை செய்யுங்கள்.

  சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும். அதனால் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும் நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடிக்கடி ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது ஆரோக்கியமானது அல்ல.
  • இரவில் சவுகரியமாக படுக்கமுடியாமல் அடிக்கடி எழுவது முதுகுவலியை உண்டாக்கிவிடும்.

  பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நல பிரச்சினைகளில் முதுகுவலி தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது. ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் முதுகுவலி தானாகவே சரியாகிவிடும். ஆனால் அடிக்கடி முதுகுவலியால் அவதிப்பட்டால் அலட்சியம் கொள்ளக் கூடாது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. முதுகுவலியை தவிர்க்க மனதில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு...

  1. நீண்ட நேரம் உட்காருவதை தவிருங்கள்: அலுவலக வேலை பார்க்கும் பெண்கள் அன்றைய நாளின் பெரும்பகுதியை ஒரே நிலையில் அமர்ந்தபடியே செலவிடுகிறார்கள். அப்படி உட்கார்ந்திருப்பது முதுகு வலியை உண்டாக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சிறிதளவு நேரமாவது எழுந்து நடமாட வேண்டும். மீண்டும் ஒரே நிலையில் அமர்வதை தவிர்க்க வேண்டும். பெரிய அளவில் உடல் அசைவு இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது முதுகு தசைகளை பலவீனப்படுத்திவிடும்.

  2. மெத்தையை மாற்றுங்கள்: தூங்குவதற்கு சவுகரியமாக மெத்தை அமைந்திருக்க வேண்டும். கடினமாகவோ, மிகவும் மென்மையாகவோ இருக்கக்கூடாது. 10 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் மெத்தையை மாற்றிவிட வேண்டும். பொதுவாக மெத்தைகள் முதுகெலும்பு பகுதி வளைந்து கொடுக்கும் வகையிலும், அதன் ஆரோக்கியத்தை பேணும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. அதன் தன்மையில் இருந்து மெத்தை மாறுபட்டால் முதுகு தண்டுவடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக முதுகு வலி உண்டாகலாம்.

  3. நன்றாக தூங்குங்கள்: மெத்தை சமச்சீரற்ற நிலையிலோ, மேடு பள்ளமாகவோ இருந்தால் உடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அது தூக்கத்தை பாதிக்கும். இரவில் சவுகரியமாக படுக்கமுடியாமல் அடிக்கடி எழுவது முதுகுவலியை உண்டாக்கிவிடும்.

  4. ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்: உடல் எடைக்கும், முதுகுவலிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. உடல் எடையை சீராக பராமரிப்பது முதுகுவலியை தடுக்க உதவும். அதிக உடல் எடையுடன் இருப்பது முதுகெலும்பு மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உடல் எடையை குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.

  5. மோசமான தோரணையை தவிருங்கள்: ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காரும் பட்சத்தில் உடல் தோரணையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏெனனில் மோசமான உடல் தோரணை காரணமாக முதுகுத்தண்டு, இடுப்பு போன்ற பகுதிகளில் அழுத்தம் ஏற்படும். நாளடைவில் அந்த பகுதியில் இருக்கும் தசைகள் தளர்வடைந்து முதுகுவலியை ஏற்படுத்தும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் உடலுக்கு அசைவு கொடுங்கள். சரியான உடல் தோரணையை பராமரியுங்கள்.

  6. புகைப்பிடிப்பதை தவிருங்கள்: புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கும், முதுகுத்தண்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புகைப்பிடிப்பதால் முதுகுவலி ஏற்படலாம். ஏனெனில் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து விடும். புதிய எலும்புகளின் வளர்ச்சியை தடுத்துவிடும்.

  7. உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்று பவர்கள் அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது தவறான உடல் அசைவை கையாள்வது முதுகு வலிக்கு வழிவகுக்கும். அதிக எடையை தூக்குவது, மோசமான தோரணையில் உடற் பயிற்சி செய்வது முதுகு வலி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

  8. ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு: கால்சியம், வைட்டமின் டி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து உட்கொள்ளவில்லை என்றால், முதுகுவலி அபாயம் அதிகரிக்கக் கூடும்.

  9. ஹை ஹீல்ஸ் அணிவதை தவிருங்கள்: நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவது பெண்களுக்கு முதுகு மற்றும் கால் வலியை ஏற்படுத்தும். அவை கால்கள் மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் அழுத்தத்தை தரும். ஹை ஹீல்ஸ் அணிவது நாகரிகமாக தெரியலாம். ஆனால் அடிக்கடி அணிவது ஆரோக்கியமானது அல்ல.

  10. அதிக எடையை சுமக்காதீர்கள்: தோளில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமப்பது தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாக தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
  நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவை வந்து போகும். பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு வருகின்றனர்.

  இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹுமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால் மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு காரணமாகி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

  நோயின் அறிகுறியாக தொண்டையில் வலி இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டையில் வெளிப்பொருள் அடைத்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி உடல் தளர்ந்து போகும். கை, கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும். மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது.

  இதற்கு சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி ஆரம்ப கட்டத்திலேயே தொண்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நவீன தொண்டை என்டாஸ்கோப்பி பரிசோதனை மூலம் சிகிச்சை பெற்று குணம் அடையலாம். மூக்கு தண்டு வளைதல் இருந்தால் அதனை என்டாஸ்கோப்பி மூலமாக சரி செய்ய முடியும். சைனஸ் நோய் இருந்தால் அதனை நிரந்தரமாக சரி செய்யலாம். சளி பிடிக்கின்ற உணவு வகைகளை தவிர்த்து முக்கு, தொண்டை, வாய், பற்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.

  இந்த நோயினை ரத்தபரிசோதனை மூலமாக எளிதில் கண்டறியலாம். குறிப்பாக தொண்டையில் இருந்து சிறிது சளியை எடுத்து அதனை கல்சர் டெஸ்டிங் என்று சொல்லப்படுகிற கிருமி ஆய்வு செய்வதன் மூலமாகவும், ஏ.எஸ்.ஓ. டிட்ரி என்று சொல்லப்படுகிற ரத்த பரிசோதனை மூலமாகவும் தற்போதைய அதிநவீன ஆய்வுக்கூட நோய் எதிர்ப்பு திறன் ஆய்வுகள் மூலமாகவும் எளிதில் கண்டறிய முடியும்.

  மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் சைனஸ் அறுவை சிகிச்சை அல்லது டான்சில் அறுவை சிகிச்சை மூலமாகவோ தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
  மூட்டு வலி வீக்கம் என்பது மூட்டில் ஏற்படும் தேய்மானம், பாதிப்பு போன்றவைகளால் ஏற்படுவது ஆகும். இது எந்த மூட்டு பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். கட்டை விரலில் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆய்வுகளின் படி 40 வயதினை கடந்தோருக்கு இது ஏற்படுகின்றது.

  ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு கூடுதலாக ஏற்படுகின்றது. கட்டை விரலின் அடிப்பகுதியில் ஏற்படும் இப்பாதிப்பு கார்டிலிலேஜ் தேய்மானம் காரணமாக ஏற்படுகிறது. எதனையாவது கைகளில் எடுக்க முயலும்போது விரலில் வலி ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறியாக வெளிப்படும். மேலும்

  கட்டை விரலின் அடியில் வீக்கம்
  வலி, விரல் அசைப்பதில் கடினம்
  விரலில் பலமின்மை போன்றவை இருக்கலாம்.

  தேய்மானம் காரணமாக இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால் எலும்பு எளிதில் உடையும் அபாயமும் அதிகம் ஆகின்றது. மருத்துவர் பரிசோதனைகள் மூலம் பாதிப்பினை உறுதி செய்வார்.

  கட்டை விரல் பாதுகாப்பு

  * விரல்களுக்கான பயிற்சி
  * வீக்கம் குறைவதற்கான மருந்துகள்
  * அதிக கடின வேலை விரலுக்கு அளிக்காமை ஆகியவை மூலம் விரல் பாதுகாக்கப்படுகின்றது.
  * சில நேரங்களில் சிகிச்சை பயன் அளிக்காத போது அவசியம் ஏற்படின் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

  வைட்டமின் ஏ.சி.இ. இவைகள் வீக்கத்தினைக் குரைத்து மூட்டு அசைவுகளை எளிதாக்கும். மருத்துவ ஆலோசனை பெற்று இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

  கொலஸ்டிரால் அதிகமாக இருப்பின் மருத்துவ உதவியோடு அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். கால்ஷியம், வைட்டமின் டி சத்து இவைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

  மீன், ஆலிவ் எண்ணெய், பால், தயிர், சீஸ், அடர்ந்த பச்சை நிறம் கொண்ட கீரைகள், காய்கறிகள், பிரோகலி, கிரீன்டீ, பூண்டு, கொட்டைகள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள தகுந்த பாதுகாப்பு மூட்டுகளுக்குக் கிடைக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உட்கார்ந்தே அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு கழுதது வலி வரும். அவர்கள் கழுத்து வலியை முற்றிலும் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.
  இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. இத்தகைய கழுத்து பகுதியில் ஏற்படும் கழுத்து வலியை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

  கழுத்து வலியை முற்றிலும் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.

  ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.

  நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.

  இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் போகும்.

  கழுத்து வலியை போக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். காய் கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும்.

  தலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து வலி பறந்து விடும்.

  எந்த வலியையும் குணமாக்க அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது அக்குபஞ்சர் செய்வதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு வலிகள் குறைகிறது.

  ஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.

  செய்ய கூடாதவை

  படுத்துக்கொண்டே டி.வி. பார்க்கக்கூடாது. கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்யக்கூடாது. வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்துவலியினை அதிகப்படுத்தும்.

  உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். பித்த உணவுகளை அதிகம் எண்ணெய் மன அழுத்தம் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். தொண்டையை பாதுகாக்க 10 வழிமுறைகளை பார்க்கலாம்.
  1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.

  2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும்  மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

  3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

  4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.

  5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும்.  இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.  6. வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

  7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை.  உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும்.  மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

  8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.

  9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.

  10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம்.  பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது.  ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம்.
  வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

  * ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஆப்பிள் வினிகருடன் தண்ணீர் சேர்த்தும் பருகிவரலாம்.

  * இஞ்சியும் மூட்டு வலியை விரட்டியடிக்கும். இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டுவலி கட்டுப்படும். இஞ்சியை டீயாக தயாரித்தும் பருகிவரலாம். நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

  * இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம். பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகிவரலாம். இவ்வாறு செய்தால் மூட்டுவலி கட்டுப்படும்.

  * எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.
  இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களிடம் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

  இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து விடுபட 10 வழிகளை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம் என்றும், இதனால் கவலை வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

  1. தினமும் காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை மேல் நோக்கி நீட்டுங்கள்.

  2. அமரும்போது வளையாதீர்கள்.

  3. தினமும் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

  4. தினமும் குறைந்தபட்சம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

  5. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

  6. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

  7. சுருண்டு படுக்காதீர்கள்.

  8. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

  9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

  10. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் டென்னிஸ் எல்போ வியாதி வருகின்றது.
  தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் இவ்வியாதி வருகின்றது.

  மணிக்கட்டைச்சுற்றியும் வெளிப்புறமாகவும் வலி ஆரம்பிக்கும், கைகுலுக்கும் போதும் ஏதாவது ஒன்றை பிழியும் போதும், பொருட்களை தூக்கும்போதும், மூடியைத் திறக்கும் போதும் வலி அதிகமாகும்.

  ஆயுர்வேத சிகிச்சை

  மூன்று தோஷங்களும் நிலைமாறுவதால் வரலாம் மூட்டுக்களை தவறான முறையில் உபயோகிப்பதாலும் வரலாம், அடிபடுவதாலும் வரலாம்.

  சிகிச்சை

  மூன்று தோஷங்களையும் சமநிலைபடுத்துவதே இதற்கான சிகிச்சை முறையாகும். மூட்டைத் திரும்பத் திரும்ப உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நோய் சரியாகும் வரை குறிப்பிட்ட மூட்டு அசையாமல் கட்டி வைப்பது நல்லது. தன்வந்த்ரம் தைலம் உபயோகிக்கலாம்.

  எள், வெந்தயம் ஆகியவற்றை பாலில் வேக வைத்து பத்துபோடலாம். தசமூலசூரணம், பால் இவற்றை கலந்து பத்து போடலாம். முறிவெண்ணை உபயோகித்து கட்டுப் போடலாம். பஞ்சாம்ல தைலம், முறிவெண்ணை, பிண்ட தைலம், ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

  உள்ளே சாப்பிட

  மஹாமஞ்சிஷ்டாதி கஷாயம், தன்வந்த்ரம் கஷாயம், சந்திரபிரபா குளிகா ஆகியவற்றை உள்ளே சாப்பிடலாம்.

  குதிகால் வலி: (வாத கண்டகம் / அஸ்திகிரந்தி)
  குதிகால் எலும்பில் முள்போன்று வளர்வதால் இந்நோய் வருகின்றது.
  கண்டகம் என்றால் முள், எலும்பின் அதிக வளர்ச்சியே இந்நோய்.

  உள்ளே சாப்பிட மருந்து

  குக்குலு திக்தககஷாயம், பஞ்சதிக்தத ஷீரம், எள், கஷாயம் ஆகியவற்றை உள்ளே எடுக்கலாம்.

  வெளியே போட

  பலா அஸ்வந்தாதி தைலம், கொட்ட ஏசுக்காதி தைலம் ஆகியவற்றால் பத்து போடலாம்.புளி இலை/ஆமணக்கு இலையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, மூட்டை கட்டி, சூடு செய்து கொடுக்கலாம்.

  வீட்டு வைத்தியம்

  செங்கல்லைச் சூடாக்கி அதன்மேல் பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மேல் குதிகாலை வைக்க வேண்டும் முள்போல இருப்பது மழுங்கி விடும்.

  ஆஸ்டியோ மைலைட்டிஸ்

  எலும்பு மஜ்ஜையில் வரும் நோய்தொற்று  காரணம்

  எலும்பு, எலும்பு மஜ்ஜையில் டி.பி. இருப்பதால் வருவது. குழந்தைகள், பருவ வயதினர்க்கு அதிகம் வரும் நீரிழிவு நோயால் காலில் வரும் புண்கள் மூலம் பரவும் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தால் வரும்.

  அறிகுறிகள்

  பாதிக்கப்பட்ட இடத்தில் வலி இருக்கும், காய்ச்சல் வரும், பாதிக்கப்பட்ட இடம் நெகிழ்ந்து மென்மையாக இருக்கும்.

  சிகிச்சை

  இந்நோய் பித்த அனுபந்த வாதத்தால் வருகிறது. வீக்கம் பித்தத்தால் வருவதே. ஆகவே பித்தம் குறைய, வாத அனுலோபனம் செய்ய வேண்டும் வாதத்தை அதன் போக்கில் திருப்ப வேண்டும்.

  உள்ளே சாப்பிட

  புனர்னவாதி கஷாயம், பலாகுடூச்சியாதி கஷாயம், தீராயந்த்தாதி கஷாயம், சுகுமாரகஷாயம், சுகுமாரக்ருதம் ஆகியன உள்ளே சாப்பிடலாம்.

  வெளியே தேய்க்க


  மதுயஷ்டியாதி தைலம், ஆரணாளாதி தைலம் ஆகியன வெளியே தேய்க்க கூடியவை.அரிசி கழுவிய தண்ணீரை, புளிக்க வைத்து தாரா செய்யலாம். கரும்புச்சாறு கொண்டும் தாரா செய்யலாம்.

  - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
  (போன் 0422-2367200, 2313188, 2313194)

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
  வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம்.

  * மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.

  * மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்

  * அடிவயிறு வலது மூலை வலித்தால் அது அப்பண்டிஸ்  * அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகள்

  * அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்

  * நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன் பிரச்னை

  * தொப்புளை சுற்றி வலி இருந்தால் ஃபுட் பாய்சனாக இருக்கலாம்

  இப்படி வலி ஏற்படும் பகுதியை வைத்து நாமே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
  இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

  இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…

  இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

  * நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.

  * உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

  * உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.

  * ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.

  * அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.

  * மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.

  * நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.

  * வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print