என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women HealthProblem"

    • மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
    • ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?

    கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

    "டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?

    ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.

    அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

    சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?

    மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.

    ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?

    பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.

    ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.

    கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?

    முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.

    விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?

    இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.

    கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?

    முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுடன், மன அழுத்தம் இல்லாமல், கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டியது அவசியம்.
    கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் - மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. பெட்ரூமில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த்தனை பண்ண வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமூகம் தழைத்தோங்க ஆண் - பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்… விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன.



    அதனால கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்.

    கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும்.

    சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்னை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும்.

    கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறிமுறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்.
    ×