என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IVF"

    • மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
    • ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?

    கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

    "டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?

    ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.

    அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

    சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?

    மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.

    ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?

    பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.

    ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.

    கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?

    முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.

    விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?

    இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.

    கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?

    முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

    • மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும்.
    • முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது.

    முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது. இந்த முறையில் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாக செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம் கூறுகிறது.

    2017-ம் ஆண்டு அறிக்கையின்படி இந்திய சந்தையில் இந்த சிகிச்சைக்கான மருந்துகள், கட்டணங்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,832 கோடி வரை சந்தைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது படிப்படியாக உயர்ந்து 2023-ல் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்து இருப்பதாக மருத்துவ பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.

    கருப்பையில் கணவனின் விந்தணுவை செயற்கையாக ஊசி மூலம் செலுத்துதல், சோதனைகுழாய் மூலம் கருத்தரித்தல், சோதனைக் குழாயில் கருவூட்டிய கருவை தாயின் கருப்பையில் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகளுக்கு காப்பீடு பெறும் வசதி இல்லை.

    கடின சிகிச்சை முறை, பணச்சுமை, உடல்நல பாதிப்பு போன்ற அம்சங்களால் அந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள பலரும் தயங்குகின்றனர். எனவே அவற்றுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். அது கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
    • தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்

    மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா சரண் சிங் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். வரும் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    • ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது.
    • செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.

    புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.

    மேலும் அவர் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் எனவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் பெற்றோருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.  

    • கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும்

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், "அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

    செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ×