என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IVF Method"

    • மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
    • ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?

    கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

    "டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?

    ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.

    அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

    சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?

    மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.

    ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?

    பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.

    ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.

    கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?

    முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.

    விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?

    இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.

    கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?

    முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

    • பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக உள்ளது.
    • கருமுட்டை குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    கரு முட்டைகளை உறையவைப்பது என்றால் என்ன?

    கரு உறைய வைத்தல் என்பது அதி நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். இதில் 2 முறைகள் பராமரிக்கப்படுகிறது. ஒன்று பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டைகளை எடுத்து சேமித்து வைக்கும் முறை.

    மற்றொன்று கருமுட்டைகளை விந்தணுவுடன் சேர்த்து கருவாக உறுமாறி 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு எம்ரியோ ஃப்ரீசிங் அதாவது கரு உறைய வைத்தல் முறை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

    இந்த முறையில் கருமுட்டைகளை மட்டுமே எடுத்து சேமித்து வைக்கும் போது அது தரமான முட்டைகள் தானா என்ற உத்திரவாதம் அளிக்க முடியாது. சில நேரங்களில் கருக்கலைந்துபோக வாய்ப்புகள் அதிகம். எனவே தான் இந்த கருமுட்டைகளை எம்ரியோவாக மாற்றி தான் சேமித்து வைப்பது தான் நல்லது.

    அப்படி உருமாற்றி உள்ள கருவை திரவ நைட்ரஜை பயன்படுத்தி குடுவைக்குள் செலுத்தி குறிப்பிட்ட வெப்பநிலையில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. இதனை தேவைப்படும் போது எடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

    பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான 'ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்' என்பது இதன் பெயர். இதனை கருமுட்டைகளை உறைய வைக்கும் முறை என்று குறிப்பிடப்படுகிறது.

    இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும். அவை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

    ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம், நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறுபவர்கள் அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

    எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம்பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

     

    கரு முட்டைகளை எப்படி உறையவைப்பது?

    மாதவிடாய் காலத்தின்போது, பொதுவாக ஒரு கரு முட்டை உருவாவதுண்டு. பல கரு முட்டைகள் உருவாவதற்கு பெண்களுக்கு ஊசி வழியாக சுரப்பிநீர் செலுத்தப்படும்.

    கரு முட்டைகளை அகற்ற, அல்ட்ரா சவுண்டு கருவியைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    தரம் மிகுந்த கரு முட்டைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க, அந்த நடைமுறை பல முறை தொடரலாம். அதன்பிறகு கரு முட்டைகள் பின்னர் உறையவைக்கப்படும்.

    நடைமுறையில் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

    யாரெல்லாம் எக் ஃப்ரீசிங் முறையை பயன்படுத்தலாம்.

     இப்போது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக "எக் ஃப்ரீசிங்" எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர்.

    உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளம்வயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.

    ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும்.

    எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.

    தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லை என்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

    மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர்.

    உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.

    அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்த பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    பெண்ணின் கருவணுவகத்தில் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்த கரு முட்டைக்குள் புகுத்தி அதை சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது.

    அந்த கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து முழுக் குழந்தையாக வெளிப்படும்.

    பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும். எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.

    ×