என் மலர்
இந்தியா

காதல் தோல்விகள், உறவு சிக்கல்கள் குறித்து புதிய பாடத்தை அறிமுகம் செய்த டெல்லி பல்கலைக்கழகம்
- இளைஞர்களிடையே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
- டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
காதல் தோல்விகள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து புதிய பாடத்திட்டம் டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
காதல் தோல்விகள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள 'Negotiating Intimate Relationships' புதிய பாடத்திட்டத்தை டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
டேட்டிங் செயலிகள் பயன்பாடு அதிகரிப்பு, காதல் தோல்வி, தகாத உறவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இளைஞர்களிடையே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் பாடத்திட்டம் அன்பையும் நட்பையும் புரிந்துகொள்வது, மற்றும் ஆரோக்கியமான பிணைப்புகளை உருவாக்குதல் வரை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த பாடத்திட்டம் குறித்து பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் நவீன் குமார், "இன்றைய இளைஞர்கள் சிக்கலான சவால்களை எதிர்கொள்கின்றனர். பெற்றோர் இருவரும் வேலை செய்வதால் அவர்களின் சுதந்திரம் பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள், ஆனால் எல்லைகள் எங்கே இருக்கின்றன என்று அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உறவு முறிவுகளுக்கு வழிவகுக்கிறது.
இந்தப் பாடத்திட்டம் கோட்பாட்டை நேரடி கற்றலுடன் இணைக்கிறது. இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று விரிவுரைகள் மற்றும் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.






