என் மலர்

  நீங்கள் தேடியது "malaika arora"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் அர்ஜுன் கபூரும் காதலித்து வருகின்றனர்.
  • மலைக்கா அரோரா திருமணம் செய்து கொள்ளாமல் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

  பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலின் மூலம் பிரபலமானார். இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.


  மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

  மலைக்கா அரோரா சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். தற்போது நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வரும் மலைக்கா அரோரா அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.


  மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

  50 வயதை நெருங்கிவிட்ட மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயதை பொருட்படுத்தாமல் காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நடிகை மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவியது. அர்ஜுன் கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.


  மலைக்கா அரோரா - அர்ஜுன் கபூர்

  இதனால் கோபமடைந்த மலைக்கா அரோரா தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார். மேலும், அர்ஜுன் கபூரும் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிரபல பாலிவுட் செய்தி வெப்சைட் ஒன்றின் செய்தியைக் குறிப்பிட்டு "நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறீர்கள். குப்பைச் செய்தியை சர்வசாதாரணமாக நேர்மையற்ற முறையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். இது போன்ற செய்தியை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


  அர்ஜுன் கபூர் பதிவு

  இந்நிலையில், இவர் மீண்டும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், " கர்மா எல்லோரையும் பின்தொடர்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களை ஏமாற்றி விட்டு அதில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது, நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. சுற்றி நடப்பதே சுற்றி வருகிறது. விரைவில் நீங்கள் செய்த செயலுக்கானப் பலனைத் திருப்பித் தந்துவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத கால திருமண நாளை கொண்டாடினர்.
  • தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் நடிகை மலைக்கா அரோரா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

  விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை சில தினங்களுக்கு முன்பு கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்ட பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்.


  தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் பிரபல நடிகை மலைக்கா அரோரா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மலைக்கா பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "வாழ்த்துக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்... உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  1998-இல் வெளியான "உயிரே" என்ற தமிழ் படத்தில் இடம்பெற்ற "தக்க தைய்ய தைய்யா" பாடலின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் மலைக்கா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.

  ×