பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை

மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை
Published on

பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் மொட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக இரண்டு போலீசார் சென்றுள்ளனர். இதுவரை தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கண்டெடுக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டபோது நடிகை மலைகா அரோரா வீடடில் இல்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மலைகா குடும்பத்தினர் இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் தனியாக பிரிந்தனர். அவரும், அவருடைய தங்கை அம்ரிதா ராவ் (அப்போது 6 வயது) அவர்களுடைய தாயாரால் வளர்க்கப்பட்டனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com