என் மலர்
நீங்கள் தேடியது "நயன்தாரா"
- கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் டாக்சிக்.
- இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் டாக்சிக். இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகர் அக்ஷய் ஓபராய் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் இப்போது ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் டாக்சிக் படத்தில் நடிக்கிறேன். நயன்தாராவும் படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார். படக்குழுவினர் படம் பற்றிய தகவல்களை வெளியிடாதால் நான் படம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.
டாக்சிக் படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, சுருதிஹாசன் நடித்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தை மையமாக கொண்டு அதிக பொருட் செலவில் படம் உருவாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.
- சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரிக்கும் படம் 'TEST. இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், படம் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், 'TEST' படம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்சில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனதாரா பகிர்ந்துள்ளார்.
- நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனதாரா பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "உங்கள் வீட்டில் புன்னகை பொங்க.. இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நண்பர்கள் குழ மகிழ்ச்சி பொங்க.. பொங்கட்டும் தைப் பொங்கல். நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று நயனதாரா பதிவிட்டுள்ளார்.
- ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர்.
- நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை.
ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் நயன்தாரா குஷியானார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது நயன்தாரா கூறியதாவது:-
நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை. யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்தரமாக பேசினாலும், தப்பாக நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் நம் வேலையை உண்மையாகவும், உறுதியாகவும் செய்தால் தானாகவே Self Confident வரும். அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும்.
என நயன்தாரா கூறினார்.
- நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கு.
- நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு பதில் அளிக்கும்படி உத்தரவு.
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம்பெற்று இருந்தது.
இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்-இன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
- தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார்.
- அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர்.
பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷை விமர்சித்து நயன்தாரா 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
- 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே நயன்தாராவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale". இந்த ஆவணப்படத்தில் திரையுலகில் தான் சந்தித்த வெற்றி, தோல்வி, சவால்கள், காதல், கல்யாணம் என பல விஷயங்களை நயன்தாரா பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து இந்த ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18-ந்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த படத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தின் பாடல் காட்சிகளை வெளியிட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று (NOC) கோரப்பட்டது. ஆனால், அவர் இவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமல், தடையின்மை சான்று தராமல் இருந்ததை தொடர்ந்து, நயன்தாரா அவரை விமர்சித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
இதனிடையே தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், சர்ச்சைக்குள்ளான அந்தக் காட்சியையும் பகிர்ந்து, "இந்த சிறிய காட்சிக்குத்தான் ரூ.10 கோடி கேட்டார்கள். அதை இங்கே இலவசமாகவே பகிர்கிறேன் நீங்களே பாருங்கள். அன்பைப் பரப்புங்க சார்" என்று தனுஷை மறைமுகமாகச் சாடினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனிடையே, தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் வேஷ்டி சட்டையில் தனுஷும், சேலையில் நயன்தாராவும் அவருடன் விக்னேஷ் சிவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வருவதால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பார்த்துக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி BTS காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றதாகவும், இதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனுஷ் கோரியிருந்தார்.
ஆனால், தனுஷின் கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்காமல், அந்த காட்சிகளுடன் ஆவணப்படம் வெளியானது. அதன்பின்னரும் காட்சிகளை நீக்க கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ரூ.10 கோடி நஷ்டஈடு கோரியுள்ள வழக்கில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- விக்னேஷ் சிவன் புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார்.
- பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் நயன்தாரா வின் ஆவண திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார். புதுச்சேரியில் சில இடங்களில் ஷூட்டிங் செய்வதற்கும் இசை கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த பேச்சு வார்த்தையில் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு உரிமையான `சீகல்ஸ்' ஓட்டலை விலை கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளத்து விக்னேஷ் சிவன் அவர் தரப்பு பதிலை அறிக்கையாக நேற்று வெளியிட்டார்.
தற்பொழுது அந்த சர்ச்சையை விளக்கி புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியுள்ளார் அவர் கூறியதாவது " இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை சந்தித்து புதுச்சேரியில் சில இடங்களில் படப்பிடிப்பு செய்ய அனுமதிகளையும், கலை நிகழ்ச்சிகளை நடத்த இடங்களை பற்றி விசாரித்தார். அப்பொழுது அவருடன் வந்த உள்ளூர் சினிமாத்துறை நபர் புதுச்சேரி சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்க போகிறீர்களா? அப்படி விற்றா என்ன விலை போகும் ? என்ற மாதிரியான கேள்வியை கேட்டார். அரசாங்கத்தின் இடத்தை யாருக்கும் விற்க அனுமதி இல்லை. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு சொத்துகளும் குடியரசு தலைவரின் பெயரில் இருக்கிறது" என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தில் சஞ்சய்தத் வில்லனாக நடிக்கிறார்.
- கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வரும் நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மண்ணாங்கட்டி டெஸ்ட், டியர்ஸ் டூ டண்ட் டாக்கிக், ராக்காயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் நயன்தாரா பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருபபதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய்தத் வில்லனாக நடிக்கிறார். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
- பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி:
திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ்சிவன் நேற்று இரவு 7 மணிக்கு புதுச்சேரி வந்தார். புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற அவர் அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான `சீகல்ஸ்' ஓட்டலை விலை பேசினார். இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்த அவர் விக்னேஷ் அது அரசு சொத்து என்றார். உடனே விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டார்.
அதற்கு அமைச்சர் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிசெய்து வருகிறார்கள். அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது' என்றார்.
தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பின்னர் விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே கலை நிகழ்ச்சி நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டார்.
அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுது போக்கு மையம் ஒன்றை கட்டி வைத்துள்ளோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும், அதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினால் போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம்' என்றார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் சிவன் பின்னர் சட்டசபை வளாகத்தில் இருந்து புறப்பட்டு துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் புதுச்சேரியில் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வருவதால் அதில் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன் தாராவில் ஆவண திரைப்படம் வெளியானது.
- நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை நீக்க கோரி துனுஷ் வழக்கை தொடர்ந்தார்.
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன் தாராவில் ஆவண திரைப்படமான நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆவண திரைப்படத்தில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை நீக்க கோரி துனுஷ் வழக்கை தொடர்ந்தார். அதற்கு சன்மானமாக 10 கோடி கேட்டது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அக்காட்சியை நீக்காமல் நெட்பிளிக்ஸ் - இல் வெளியிட்டனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது அவரது எக்ஸ் தள அக்கவுண்டை டீஆக்டிவேட் செய்துள்ளார். இதற்கான பின்னணி காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் வழக்கம் போல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகதான் உள்ளார்.
தனுஷ் மற்றும் நயன் தாரா இடையே உள்ள கருத்து வேறுபாடினால் இவர் இச்செயலை செய்துள்ளாரா என கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- நயன்தாரா மீது வழக்கு தொடர சென்னை ஐகோர்ட்டு அனுமதி.
- நயன்தாரா பதில் மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல்.
சென்னை:
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் சினிமா வாழ்க்கை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு கடந்த 18-ந்தேதி நெட் பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது.
முன்னதாக ஆவணப் படம் தொடர்பாக வெளியான புரோமோவில் 'நானும் ரவுடிதான்' பட காட்சிகள் தனது முன் அனுமதி பெறாமல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி தர வேண்டும் என வழக்கறிஞர் வாயிலாக நயன்தாராவுக்கு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதைத்தொடர்ந்து தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகள் கூறி நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனுஷ் எதிர்ப்பை மீறி 18-ந்தேதி வெளியான ஆவணப்படத்திலும் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து தனுஷ் நயன்தாரா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ் வழக்கு தொடர தனுசுக்கு அனுமதி அளித்தார்.
இதையொட்டி நயன்தாரா மீது தனுஷ் இன்னும் சில தினங்களில் வழக்கு தொடர போவதாக கூறப்படுகிறது.
இதையொட்டி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த கட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவை பொருத்து நீதிமன்றத்தில் நயன்தாரா பதில் மனுதாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.