search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student president"

    சமீபத்தில் நடந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற ஏபிவிபி அமைப்பின் அங்கிவ் பைசோயா போலி சான்றிதழ் அளித்து படிக்க சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. #DUSUElection2018 #ABVP #NSUI
    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வென்றது. செயலாளர் பொறுப்பை காங்கிரசின் மாணவர் அமைப்பு வென்றது.

    தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏபிவிபியின் அங்கிவ் பைசோயா, பிஏ தமிழகத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக கூறி டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ இணைந்துள்ளார்.

    ஆனால், அவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பெற்றதாக கூறப்பட்ட பட்டச் சான்றிதல் போலீயானது என காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சான்றிதழின் எண்ணை பல்கலைக்கழகத்தில் கொடுத்து விசாரித்ததில், அது போலியானது என பல்கலைக்கழம் கடிதம் அனுப்பியுள்ளதை அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏபிவிபி பட்டச்சான்றிதழ்களை ஆய்வு செய்தே டெல்லி பல்கலைக்கழகம் அங்கிவ்க்கு எம்.ஏ சீட் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது. 
    ×