search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    100 ஆண்டு கால அடிமைத்தனம் கல்வி மையங்களை அழித்துவிட்டது- பிரதமர் மோடி
    X

    100 ஆண்டு கால அடிமைத்தனம் கல்வி மையங்களை அழித்துவிட்டது- பிரதமர் மோடி

    • நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
    • இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அங்கீகாரத்தைப் பெறுகின்றன.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.

    பிரதமரின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

    பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிானர்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் அல்ல இயக்கம். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது. 100 ஆண்டு கால அடிமைத்தனம் அதன் கல்வி மையங்களை அழித்துவிட்டது. வளர்ச்சியை முடக்கியது.

    சமீபத்திய ஆண்டுகளில் ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது. 2014ல், க்யூஎஸ் உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 45ஆக உயர்ந்துள்ளது.

    கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2014க்கு முன் இந்தியாவில் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×