குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருபுவனம் மேலவீதியை சேர்ந்த சிவா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.காமராஜ் நகரை சேர்ந்த கீர்த்தி என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் மேலவீ தியை சேர்ந்தவர் சிவா (வயது 22).

இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதையடுத்து இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

என்று மாவட்ட கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி சிவாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதேப்போல் திருவிடை மருதூர் தாலுகா அம்மாச த்திரம் காமராஜ் நகரை சேர்ந்த கீர்த்தி (26) என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com