என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.
இலவச மருத்துவ முகாம்
- இ.சி.ஜி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
- முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் பாபநாசம் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்திவாசன் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் பாபநாசம் திருப்பாலைத்துறை ரோட்டரி சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.
பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கீர்த்தி வாசன், பிரேம்நாத் பைரன், துரைமுருகன், தேன்மொழி உதயகுமார், முத்துமேரி மைக்கேல் ராஜ், புஷ்பா சக்திவேல், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கோட்டையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் போலீஸ் துணை சூப்பரண்ட் பூரணி கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இம்முகாமில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் ஆனந்த், அனு அனன்யா, வர்ஷா, ராஜாத்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 25 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமில் மருத்துவமனை மார்க்கெட்டிங் மேனேஜர் பூபதிகுமார், உதவி மேனேஜர் பழனிவேல், ரோட்டரி சங்க பொருளாளர் ஆனந்தன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில்நாதன், பிரான்சிஸ் சேவியர், விவேகானந்தம், முருகானந்தம், ராஜேந்திரன், வெங்கடேசன், பக்ருதீன் அலி அகமது, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.