குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

ஜெயக்குமார் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த கூடலூர் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38).

இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால் ஜெயக்குமாரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை கொண்டு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com