search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "convicts"

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue

    அசாம் மாநிலத்தில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போடோலாந்து இயக்கத்தலைவர் உள்பட 15 பேரை குற்றவாளிகளாக சிபிஐ கோர்ட் இன்று அறிவித்துள்ளது. #CBICourt #Assamserialblast
    கவுகாத்தி:

    அசாம்  மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைகவ்ன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 30-10-2008 அன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பலர்மீது குற்றம்சாட்டி கவுகாத்தி நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி இன்று தீர்ப்பளித்தார்.

    போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 15 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் 30-ம் தேதி தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #CBICourt #Assamserialblast
    பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #MumbaiAttack #Pakistan
    லாகூர்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சுமார் 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.



    இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது. இதைப்போல பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன.

    இதன் விளைவாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இதில் லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேரும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும் பாகிஸ்தான் கோர்ட்டில் இந்த வழக்கு மிகவும் மந்தமாகவே விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும்கூட எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசலிடம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட போது, அது குறித்து பேச மறுத்துவிட்டார்.

    ஆனால் இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம் இந்தியாதான் என பாகிஸ்தான் அரசு வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்தால் ஒரு வாரத்தில் வழக்கு முடிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இது குறித்து தலைமை அரசு தரப்பு வக்கீலான சவுத்ரி அசார் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மும்பைக்கு வருவதற்கு பயன்படுத்திய படகை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்யவும், வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டால், மும்பை தாக்குதல் வழக்கை முடிக்க ஒரு வாரம் கூட தேவையில்லை’ என்றார்.

    இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மற்றொரு அரசு தரப்பு வக்கீலான அபுசார் பீர்சாதா, அடுத்த விசாரணை 28-ந்தேதி (நாளை) நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இது இரு நாடுகள் தொடர்புடைய வழக்கு என்பதால், இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்வதால் லக்வி உள்ளிட்ட குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை குற்றவாளிகள் தரப்பு வக்கீலான ராஜா ரிஸ்வான் அப்பாசிக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்ததுடன், அதனால்தான் குற்றவாளிகள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் உறவில் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்திய மும்பை தாக்குதல் குற்றவாளிகள் விடுதலையாகும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இந்தியாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்து இருக்கிறது.
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சிறைச்சாலைகள் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர். #Indonesiaquaketsunami
    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமியும் தாக்கியது.

    இயற்கையின் இந்த சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய அந்நாட்டு அரசு தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தின்போது சுற்றுச்சுவர் இடிந்ததால் பலு மற்றும் டோங்கலா சிறைகளில் இருந்து ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். நிலநடுக்கம், சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் நிலை அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. #Indonesiaquaketsunami
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #RajivGandhiassassinationcase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. 

    இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
     
    இதையடுத்து, சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


    இந்த பரிந்துரை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமைய வேண்டும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, ‘இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு கவர்னரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார்  என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.  #7convictsrelease #subramanianSwamy #TNgovernor  #RajivGandhiassassinationcase
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. #TNGovt #Release7Innocents
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இதனை அடுத்து, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா குற்றவாளி என டெல்லி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 2010ம் ஆண்டு டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களை அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதங்கள் நாளை நடைபெற உள்ளது. அதன்பின்னர் மாதுரி குப்தாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    சட்ட விதிகைள மீறி சிமி இயக்கம் நடத்திய பயிற்சி முகாம் தொடர்பான வழக்கில் 18 பேர் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NIAcourt #SIMItrainingcampcase
    திருவனந்தபுரம்:

    நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.

    இந்த முகாமில்,  ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
     
    இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று சிறப்பு நீபதிபதி கவுசர் எடப்பாகாத் முன்னிலையில் விசாரைணக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் நீபதிபதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படுகிறது. #NIAcourt #SIMItrainingcampcase 
    ×