search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "simi training camp case"

    சட்ட விதிகைள மீறி சிமி இயக்கம் நடத்திய பயிற்சி முகாம் தொடர்பான வழக்கில் 18 பேர் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NIAcourt #SIMItrainingcampcase
    திருவனந்தபுரம்:

    நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.

    இந்த முகாமில்,  ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
     
    இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று சிறப்பு நீபதிபதி கவுசர் எடப்பாகாத் முன்னிலையில் விசாரைணக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.

    இந்த வழக்கில் குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் நீபதிபதி தீர்ப்பு அளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படுகிறது. #NIAcourt #SIMItrainingcampcase 
    ×