search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi issue"

    பொள்ளாச்சி மாணவி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கோவை

    கோவையில் மாயமான கல்லூரி மாணவி பிரகதி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் சென்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

    இதில் ஒரு தனிப்படையினர் காந்திபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் மாணவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.  #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கல்லூரி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் அண்ணன் கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கோவை:

    கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:-

    எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

    3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    அதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

    உடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.

    கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றிபெற்றால் கெட்டது பண்றவர்களுக்கு கெட்டது செய்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். #MansoorAliKhan #naamtamilarkatchi

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு சுவாரசியமாக மாறி இருக்கிறது. திரையில் பார்ப்பது போலவே காமெடியாக பேசி மக்களை சிரிக்க வைக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல் காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

    இங்கே மணல் முழுவதையும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்கு சென்றேன். அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத கிராமமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தை அந்தக் கிராமத்தில் தான் அமைக்கப் போகிறேன். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தமிழன்தான் பிரதமராக வரவேண்டும். நான் எம்.பி ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து சீட்டை துடைத்து விட்டு வர மாட்டேன். எழுந்து நின்றுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போகும் பொழுது நிறைய பேர் கேட்கிறார்கள். நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னு.

    நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்ணுவேன். இந்த ஊருக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன். பொள்ளாச்சி வி‌ஷயத்துல தவறு செய்த அவங்க தலையை வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAliKhan #naamtamilarkatchi

    பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #pollachiissue #cbi

    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது.

    அடுத்த சில மணி நேரத்தில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு தொடர்பான வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார்.

    அவர் ‘பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.


    பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலும் 5 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #pollachiissue #cbi

    என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். #pollachiissue #PollachiJayaraman

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த புகாரை கொடுக்க சொல்லிய பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதுவும் இதுவரை வெளியிடப்பட வில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் வீடியோ வெளியிட்டார். அதுவும் மறைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோமே தவிர, எங்களால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    எனது மகன்கள் வெளிநாடு தப்பிச்சென்று விட்டனர் என்று வதந்தி பரப்பி உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்லவில்லை. இங்குதான் எப்போதும் போல தங்களின் பணியை செய்து வருகிறார்கள். எனவே எங்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #pollachiissue #PollachiJayaraman 

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #pollachiissue
    திருவெறும்பூர்:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிட வலியுறுத்தி திருச்சி  எம்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் இன்று 2-வது நாளாக கல்லூரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.   

    இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் திருச்சி கோர்ட்டில் இன்று நடைபெற்ற வழக்குகளில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதேபோல் முசிறி, லால்குடி, மணப்பாறை கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  #pollachiissue
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். #pollachiissue

    கோவை:

    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. வட்டித் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. வலையில் விழுந்த பெண்களை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் சீரழித்து, வீடியோ எடுத்த விவகாரம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது.

    அப்போது போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆனால் அரசியல் பிரமுகர்கள் உதவியால், விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் இந்த கும்பல் தப்பி வந்துள்ளது. இதற்கு கைமாறாக பல லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளனர். எனினும் கடந்த மாதம் இவர்களால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததும், திருநாவுக்கரசு தவிர அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது திருநாவுக்கரசை வெளி மாநிலத்துக்கு தப்பி செல்லுமாறும் போலீஸ் அதிகாரி ஒருவர் தான் கூறி உள்ளார். ஆனாலும், வழக்கு விஸ்வரூபம் எடுத்ததும் தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று திருநாவுக்கரசை கைது செய்தனர்.

    திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளதால் அவர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளது. சில பெண்களை அடித்து, துன்புறுத்தி பணம், நகை பறித்துள்ளனர். இச்சம் பவங்களில் 20 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தினர். இதில் சில முக்கியத்தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்பேரில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    தங்களது வலையில் விழுந்த பெண்கள், மாணவிகளை இந்த கும்பல் ஆனைமலையில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீட்டிலும், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி லேப்டாப், பென்-டிரைவ், செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பலால் சீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்புடைய சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களில் உள்ள சில அடையாளங்கள், அவை திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்துகிறது. இது தொடர்பாக அவரது பண்ணை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருநாவுக்கரசுக்கு நேற்று திடீரென காலில் வீக்கம் அடைந்து, கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  #pollachiissue 

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue

    பொள்ளாச்சி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய கமல்ஹாசனுக்கு அதிமுக நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது. #pollachiissue #kamalhaasan #admk

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்றுகமல்ஹாசன் அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கறைபடிந்த கட்சிகள் என்றும், அவற்றுடன் ஒரு போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கமல் கூறியுள்ளார்.

    இதன் காரணமாக கடந்த மாதம் தி.மு.க. நாளிதழான முரசொலியில் கமல்ஹாசனை விமர்சித்து கட்டுரைகள் வெளி வந்தன. பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாக தன்னிலை மறந்துவிட்ட கமல்ஹாசன் ஏதேதோ பிதற்றுவதாக அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

    பொள்ளாச்சி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியிருந்தார். அதில் தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


    இந்த நிலையில் அ.தி.மு. க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கமலை விமர்சித்து கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    பொள்ளாச்சி விவகாரத்தில் புழுதிவாரி தூற்றுகிறாரே உளறல் நாயகன். அ.தி.மு.க. மீது வன்மம் கொண்டிருக்கும் கமல் போன்றோர் உள்நோக்கம் கற்பிக்க வெறிபிடித்து அலைகின்றனர்.

    குற்றம் இழைத்த பாதகர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஆளும் அதிமுக அரசு மீது அவதூறு பரப்புவதற்கு இதுவே தருணம் என்று குற்றச்சாட்டுகளை வீசும் தி.மு.க.வுடன், கமல்ஹாசனும் கைகோர்க்கிறார்.

    சான்றோருக்கு இரங்கல் என்று ஜெயலலிதாவின் மரணத்தையே அடிமனதினுள் கொண்டாடிய அரக்கன் தான் இந்த உத்தம வில்லன் என்பதை உலகம் அறியும்.

    இவ்வாறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #pollachiissue #kamalhaasan #admk

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    கரூர்:

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரித்து அவர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை தப்பிக்க விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் ராஜாமுகம்மது, காதர்பாட்ஷா, நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachiissue

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அவர்களை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலை 10 மணிக்கு சாலை மறியல் செய்யப்போவதாக கூறியதால், காலை 10 மணிக்கு முன்பாகவே போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்து விட்டனர். ஆனால் சாலை மறியல் மதியம் 12 மணிக்கு மேல் தான், அதுவும் சிறிது நேரம் தான் நடைபெற்றதால் போலீசார் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #pollachiissue

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் கல்லூரி மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த கயவர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திமுக சார்பில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் மூலம் நாளுக்கு நாள் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது,

    ஈரோட்டிலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை போட்டனர்.

    பின்னர் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தபால் அறிக்கை அனுப்பினர். ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி என்ற பெண் திடீரென தன் பாட்டிலில் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்தனர். அப்போது அவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக தூக்கில் இடவேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை வீரமணி மீது ஊற்றினர். இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வீரமணியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர் இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #pollachiissue

    ×