search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Superintendent"

    • இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
    • தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் வருகிற 24-ந்தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை மையாக்கப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள மது விலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னீர் பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ள லாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் தங்கள் பெயரை பதிவு செய்யும்போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவார்கள். ஏலம் எடுத்த வுடன் முழுத் தொகை மற்றும் அரசால் விதிக்கப் படும் ஜி.எஸ்.டி. சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் பள்ளியில் படித்து வந்த 7-ம் வகுப்பு மாணவர் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்
    • போலீஸ் நிலையத்தை தீயிட்டு கொளுத்துவோம் என்றும், பொதுமக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் படித்து வந்த 7-ம் வகுப்பு மாணவர் சீனு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக, அனைவரும் கலவரத்தில் இறங்குவோம் என்றும், போலீஸ் நிலையத்தை தீயிட்டு கொளுத்துவோம் என்றும், பொதுமக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயன்ற தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ் என்பவர் வீடியோ ஆதாரங்களின்படி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து வீடியோ பதிவுகளின் அடிப்படையில், இது போன்ற வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தியவர்கள் கண்டறியப்படும்

    கோவை:

    கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், செல்போனை உரியவர்களிடம் வழங்கினார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிளான 350 சொல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் போக்சோ வழக்குகளில் 149 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.

    வழக்கு விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் மாவட்ட போலீசார் 28 நாட்களில் 36 ஆயிரம் பள்ளி குழந்தைகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம், அதில் 12 ஆயிரம் பேர் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள். இந்த நடவடிக்கையால் குழந்தைகளுக்கு போலீீசார் மீது உள்ள அச்சம் குறைந்துள்ளது.

    கோவையில் குட்கா விற்பனை தொடர்பாக 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, 125 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 126 வழக்குகள், 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்துள்ளோம்.

    மேலும் மாவட்டத்தில் சந்தேக மரணமாக பதிவாகும் வழக்குகளில் உறவினர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற சிக்கல் இருந்தது, அவ்வாறு இருந்த 140 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 2019-2022 வரையில் நடந்த சாலை விபத்து 10 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டு முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தி 740 பேர் கண்டறியப்பட்டு, அதில் 500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் உரிமங்க ளை ரத்து செய்ய பரிந்து ரைக்கப்படும். மாண வர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டே மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்ப னையை தடுக்க கடும் நடவடி க்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அனுமதிபெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் பறிமுதல்: விழுப்புரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்
    • போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாக னங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத் துறையின் மூலம், நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறந்ததை யொட்டி, பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .ஸ்ரீநாதா முன்னிலை யில், மாவட்ட கலெக்ட–ர்மோகன்அவர்கள் தலைமை–யேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவிற்கி ணங்க நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, பள்ளி வாகனங்கள் முழுமை யாக பரிசோதனை செய்து இயக்கிடும் வகையில் வட்டார போக்கு வரத்துத்துறையின் மூலம் இப்பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டு அதனடிப்படையில் மாவட்டத்தில் 187 பள்ளி வாகனங்கள் பயன்படு–த்தப்பட்டு வருவதை பரிசோத னைக்கு உட்படு–த்தப்ப–ட்டுள்ளன. அதில் 147 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்து வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வாகனங்கள் பழுதடைந் துள்ளதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் நாளை ஆய்வுக்கு கொண்டு வர உள்ளார்கள். பள்ளி வாகனங்களை பொறுத்த வரை வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாக னங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதிபெறாத வாக னங்கள் பள்ளியின் பயன் பாட்டிற்கு பயன்படுத்து வது கண்டறிந்தால் வாக னங்களை பறிமுதல் செய்வ துடன், வாகன ஓட்டுநர் உரிமமும்ரத்து செய்ய–ப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராவிட்டால் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
    • தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வுகள் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருப்பார். மேலும் 20 பேருக்கு ஒரு போலீஸ்காரர் கண்காணிப்பாளராக இருப்பார்.தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வரவேண்டும். தேர்வு நடைபெறும் இடத்திற்கு 8.30 மணிக்கு வர வேண்டும். 9.50 மணிக்கு மேல் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் பதட்டப்படாமல் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வழக்கமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு பொது அறிவு தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல் தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

    இந்த முறை புதிதாக இந்த மதிப்பெண் தவிர தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும்.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்துகொள்ள தகுதி உடையோர் ஆவார்கள். இதன்படி 25-ந்் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழ் தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடத்தலை தடுக்க கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்கும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
    • கந்துவட்டி தொடா்பான புகாா்களுக்கும் முன்னு ரிமை அளித்து செயல்படுவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காா்த்திக் தற்போது சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதை தொடர்ந்து மதுரை தெற்கு மண்டலக் காவல் துணை ஆணையராக இருந்த தங்கதுரை, ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இடமாறுதலுக்குள்ளான காா்த்திக்கிடமிருந்து பொறுப்பை தங்கதுரை ஏற்றுக்கொண்டாா்.

    அப்போது அவா் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கந்துவட்டி தொடா்பான புகாா்களுக்கும் முன்னு ரிமை அளித்து செயல்படுவோம். மகளிா், பெண்கள் தொடா்பான புகாா்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலோரப் பகுதிகளில் கடத்தலை தடுப்ப தற்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் முக்கிய தகவல்கள், குற்றஞ்சாா்ந்த துப்புகள், காவல்துறை சாா்ந்த குற்றச்சாட்டுகள், குறைகள் மற்றும் தனிப்பட்ட புகாா்களை 76038 46847 என்ற காவல் கண்காணிப்பாளரின் தனி கைப்பேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக பொறுப்பேற்ற எஸ். பி. தங்கதுரைக்கு, இடமாற்றப்பட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேசியஸ், துணைக் கண்காணிப்பாளா்கள் ராஜா, பிரிட்டோ, சுபாஷ் உள்ளிட்டோா் பூங்கொத்து அளித்து வாழ்த்தினா்.

    • கந்துவட்டி புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கந்துவட்டி குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கந்து வட்டி வழக்குகளை கையாளவும் காவல்துறை இயக்குநர் சைேலந்திரபாபு அறிவுரையின்படி ஆபரேசன் கந்துவட்டி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003 -ன் அடிப்படையில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் "ஆபரேசன் கந்துவட்டி" என்ற பெயரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவர்கள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தொலைபேசி எண்களிலோ மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட புகார்கள் தொடர்பான விசாரணை உடனுக்குடன் நடத்தப்பட்டு உடனடி யாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

    இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபரேசன் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230904,04567-230759, ஹலோ போலீஸ் 83000 31100,மாவட்ட தனிப்பரிவு 04567 290113 மற்றும் 94981 01615 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ராமநாத புரம் 94981 01616 என்ற எண்ணிலும், பரமக்குடிக்கு 94981 01617,கமுதிக்கு 94981 01618, ராமேசுவரத்திற்கு 94981 01619,கீழக்கரைக்கு 94981 01620, திருவாடானைக்கு 94981 01621, முதுகுளத்தூருக்கு 04567 290208 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அனுமதியில்லாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது வீட்டில் உள்ள உடைமைகளின் பாதுகாப்பிற்கு ஒரு நபரையாவது வீட்டில் விட்டு செல்ல வேண்டும். பெண்கள் வெளியே செல்லும்போது விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    கூட்ட நெரிசலில் செல்லும்போது தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களையும், வைத்திருக்கும் பொருட்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கும்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிக்கும் கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதித்த கால அளவை மீறி பட்டாசு வெடிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதியில்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்கள் சரவெடிகளை தங்களது கடைகளில் பொதுமக்களுக்கு விற்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரி ஆறு மற்றும் அமராவதி ஆறுகளில் தற்சமயம் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று குளிப்பதையும், ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் ஜவகர்பஜாரில் குற்றத்தடுப்பு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு புறக்காவல் நிலையமும், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், ஜவகர்பஜாரில் குற்றத்தடுப்பு உயர் கோபுரங்களும், ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்படுகிறது.

    மாவட்டத்தில் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க 20 இருசக்கர வாகன ரோந்தும், 12 நான்கு சக்கர வாகன ரோந்தும் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகத்தை குறைக்க பேரிக்கார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான முறையில் கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    திருப்பூரில் உள்ள விடுதி, திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களை தங்க வைக்ககூடாது என போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருப்பூரில் நாளை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கட்சி, சாதி, மத ரீதியாக வெளியூர் நபர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அவர்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்குவதற்காக வரலாம். எனவே தங்கும் விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம்.

    சந்தேகப்படும்படி யாராவது தங்கியிருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணுக்கும், திருப்பூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
    பொள்ளாச்சி மாணவி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கோவை

    கோவையில் மாயமான கல்லூரி மாணவி பிரகதி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் சென்றனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

    இதில் ஒரு தனிப்படையினர் காந்திபுரம், பொள்ளாச்சி, பல்லடம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் மாணவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.  #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கடலூர் மாவட்ட பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் உரிமையாளர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கடலூர்:

    புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் புது புது வடிவில் கடத்தல் காரர்கள் கடத்தி வருகின்றனர். இதனால் தமிழக பகுதியில் சாராயம் மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது.

    எனவே கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை அதிகரிக்காமல் குறைந்தளவே விற்பனையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட சாராயம் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஏகபோகமாக விற்பனையாகி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட பகுதியில் இனிவருங்காலங்களில் புதுவை மாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் அதற்கு உடந்தையாக இருக்கும் சாராயக்கடை மற்றும் மதுகடை உரிமையாளர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

    மேலும் முன்பு மது கடத்தல் சம்பந்தமாக போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை செய்து அதில் சாராயக்கடை மற்றும் மது கடை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தால் குற்றப்பத்திரிகையில் அவர்களின் பெயர் சேர்க்கப்படும் அதன் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் 20 பழைய வழக்குகளில் மதுக்கடை மற்றும் சாராய கடை உரிமையாளர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    புதுவை மாநிலத்தில் இருந்து தமிழகப்பகுதிக்கு மற்றும் சாராய கடைக்கு வருபவர்கள் பிடிபட்டால் அவர்களை மட்டுமே போலீசார் கைது செய்து வாகனம் மற்றும் மதுவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது மதுக்கடத்தலை தடுப்பதற்கு புதுவை மாநில சாராயக்கடை மற்றும் மது கடை உரிமையாளர்களை கைது செய்யப்படுவார்கள். என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவித்திருப்பதால் புதுச்சேரி மாநில பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    ×