search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
    X

    போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை

    கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    • கடத்தலை தடுக்க கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்கும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
    • கந்துவட்டி தொடா்பான புகாா்களுக்கும் முன்னு ரிமை அளித்து செயல்படுவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய காா்த்திக் தற்போது சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதை தொடர்ந்து மதுரை தெற்கு மண்டலக் காவல் துணை ஆணையராக இருந்த தங்கதுரை, ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இடமாறுதலுக்குள்ளான காா்த்திக்கிடமிருந்து பொறுப்பை தங்கதுரை ஏற்றுக்கொண்டாா்.

    அப்போது அவா் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கந்துவட்டி தொடா்பான புகாா்களுக்கும் முன்னு ரிமை அளித்து செயல்படுவோம். மகளிா், பெண்கள் தொடா்பான புகாா்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலோரப் பகுதிகளில் கடத்தலை தடுப்ப தற்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் முக்கிய தகவல்கள், குற்றஞ்சாா்ந்த துப்புகள், காவல்துறை சாா்ந்த குற்றச்சாட்டுகள், குறைகள் மற்றும் தனிப்பட்ட புகாா்களை 76038 46847 என்ற காவல் கண்காணிப்பாளரின் தனி கைப்பேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக பொறுப்பேற்ற எஸ். பி. தங்கதுரைக்கு, இடமாற்றப்பட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேசியஸ், துணைக் கண்காணிப்பாளா்கள் ராஜா, பிரிட்டோ, சுபாஷ் உள்ளிட்டோா் பூங்கொத்து அளித்து வாழ்த்தினா்.

    Next Story
    ×