என் மலர்
நீங்கள் தேடியது "pollachi jayaraman"
- அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது
- திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் இ.பி.எஸ் கோரிக்கை வைத்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.
இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தொடர் கோரிக்கையால் பிரதமர் மோடி ட்ரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்தார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி தொடர் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருக்கப்போகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.
- எடப்பாடியாரின் எக்ஸ்பிரஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
- அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.
பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது:-
"தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றம், சட்டம், ஒழுங்கு பாதிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 அமாவாசைகளுக்கு பிறகு அதாவது 60 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அ.தி.மு.க ஆட்சி அமையும். சாதாரண மக்களிடமும் எளிமையாக பழகும் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டனர். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். எடப்பாடியாரின் எக்ஸ்பிரஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.
- மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் இன்று அ.தி.மு.க. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சென்று விடியா ஆட்சிக்கு, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்கிற பிரசார விளக்கக் கூட்டம் நடத்தி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஆகி உள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
எங்கள் கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும். பின்னர் படிப்படியாக மற்ற கட்சிகளும் வெளியேறும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்றார்.
- எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் என்கிற ரெயில் வேகமாக புறப்பட்டு விட்டது.
- கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.விற்கு கைவந்த கலை.
திருப்பூர்:
திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகார் தேர்தலை போல தான் தமிழ்நாட்டில் 2026 தேர்தல் அமையும். அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். தி.மு.க. ஆட்சி கடந்த 4½ ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்கள். ஆனால் அதற்கு பாடம் புகட்டும் வகையில் பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.
அதே போல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலரும். கூட்டணி கட்சியினரும் வெற்றியடைவார்கள். எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் என்கிற ரெயில் வேகமாக புறப்பட்டு விட்டது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள்.
இதில் ஏறாமல் நின்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். மேலும் வாக்காளர் சீர்திருத்தத்தை மக்கள் மிகவும் வரவேற்கின்றனர். கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.விற்கு கைவந்த கலை. சீர்த்திருத்தம் செய்தால் திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால் மு.க.ஸ்டாலின் அலறுகிறார் என்றார்.
- ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
- அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி. கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். த.வெ.க., தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் மு.க.ஸ்டாலின், காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.
த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதற்கு அ.தி.மு.க., குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1635 கோடியில் பெரிய பாலத்தை தொடங்கி வைத்துள்ளனர். 4 ஆண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.
4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை, நகைச்சுவை.
ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும். அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க.வினர் வந்தது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
- திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
- தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் தொழில்கள் நலிவடைந்து பிற மாநிலங்களுக்கு பனியன் தொழில்கள் இடம்பெயர்ந்துள்ளன. இருக்கும் தொழிலை காப்பாற்றாமல் முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார்.
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டி கொடுக்கும் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை உயர்வால் தொழிலாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும். ரூ.160 கோடி கடன் பெற்று சாலை அமைப்பதாக கூறினார்கள். ஆனால் சாலைகள் முறையாக அமைக்காமல் பணம் சூறையாடப்பட்டுள்ளது. தண்ணீர் வரி, பாதாள சாக்கடை கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்காக அவசர கூட்டம் மாநகராட்சியில் நடத்துவதாக தகவல் வருகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க. கடுமையாக போராடும். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க.வின் அதிகாரபூர்வமான வலைதளத்தில் கேவலமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை முதலமைச்சர் அதை கண்டிக்கவில்லை. அந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் நாகரீக அரசியலுக்கு வழிவகுக்கும். ஒருநாள் பொறுத்திருப்போம். மாற்றம் இல்லை என்றால் நாங்களும் இதே முறையை கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர் அரிகரசுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
- திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது.
- நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டியில் திண்ணை பிரசாரம் நடை பெற்றது.
இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை, வரி, சொத்து வரி என தி.மு.க., அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு கஷ்ட காலம் தான். திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது. அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் என ஏராளமான சலுகைகளை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழில்கள் அந்த மாநிலங்களுக்கு செல்வதாக என்னிடம் பேசிய தொழிலதிபர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தொழிலதிபர்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என அழைக்கிறார். இது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது.
எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கி, எங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு தாருங்கள் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் திருப்பூர் வந்து அழைக்கிறார். பீகார் முதலமைச்சர் கோவை வந்து அழைக்கிறார். ஆனால் நமது முதலமைச்சரோ இங்கிருக்கும் தொழிலதிபர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஒப்பந்தம் போட்டு, ஏதோ வெளிநாட்டினர் இங்கு வந்து புதிதாக தொழில் தொடங்குவது போல் நாடகம் நடத்தி வருகிறார்.
9 அமாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் லஞ்ச, ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
- தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.
திருப்பூர்:
திருப்பூர் சூசையாபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் 4½ ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு விடை தருகிற நாள்தான் பிப்ரவரி 27ந் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27. அதன் பிறகு தி.மு.க., ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.
திருப்பூர்:
மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன.
- புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கோல்டன் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு பகுதிகளிலும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 350 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் திமுக., ஆட்சியில் எங்கேயாவது ஒரு வீடாவது கட்டிக் கொடுத்திருக்கிறார்களா? அதுமட்டுமல்ல , அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதா மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். அதையும் நிறுத்திவிட்டார்கள்.
திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,அரசு வட்டியில்லா கடன் 200 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆட்சி யில் தொழில் முடங்கி கிடக்கிறது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி தி.மு.க., ஆட்சி. எப்போது ஸ்டாலின் வந்தாலும் அந்த ஆட்சியினுடைய அலங்கோலத்தை மக்கள் அனுபவிக்கிறோம்.
ஏழை எளிய மக்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 450 டாக்டர்களையும் உருவாக்கியது அ.தி.மு.க.,தான். இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
- நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
- தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
திருப்பூர்:
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தேர்தலுக்கு பின்பு நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இது தான் தி.மு.க.வின் பரிசாக உள்ளது. திருப்பூரில் தொழில் மிகவும் நசிந்து விட்டது. இதனை சரிசெய்ய தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனது திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரிலீசாக வேண்டும் என்பதற்காகவே ரஜினி, தி.மு.க.வை பாராட்டி பேசி வருகிறார். தி.மு.க.,-பா.ஜ.க., இடையே ரகசிய கூட்டணி உருவாகியுள்ளது. 2 கட்சிகளும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் உள்ள காவல்துறை செயல்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






