டிரம்பிடம் பேசி வரியை குறைத்த மோடி: திருப்பூர் தொழிலாளர்கள் சுகமாக இருப்பார்கள்- பொள்ளாச்சி ஜெயராமன்

அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் இ.பி.எஸ் கோரிக்கை வைத்தார்.
டிரம்பிடம் பேசி வரியை குறைத்த மோடி: திருப்பூர் தொழிலாளர்கள் சுகமாக இருப்பார்கள்- பொள்ளாச்சி ஜெயராமன்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தொடர் கோரிக்கையால் பிரதமர் மோடி ட்ரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்தார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி தொடர் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருக்கப்போகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com