என் மலர்
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி விவகாரம்"
- அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
- குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.
சென்னை:
தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
* குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.
* குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.
* அண்ணா பிளீஸ் அடிக்காதீங்க... அடிக்காதீங்க... என்றபோது நாங்கள் என்ன யார் அந்த அண்ணா... என்று எழுதி ஒட்டினோமா?
* சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்பதிலே முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்.
* பெண்கள் பாதுகாப்பு என்பதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சமரசமே கிடையாது என்று கூறினார்.
- நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள்.
- நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை.
வடலூர்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூர் வந்தார். அங்குள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் அவர் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-
தி.மு.க.-அ.தி.மு.க. பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். தி.மு.க.வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அ.தி.மு.க.வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.
வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் போது பாறையாக இருந்தாலும் உருட்டிக் கொண்டு தான் செல்லும். நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை. நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.
கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?
இவ்வாறு அவர் கூறினார்.
- பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
- இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று காரசார விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்தாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. அப்போது, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை திமுக மற்றும் அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இரு தரப்பும் ஆதாரங்களை வழங்கிய நிலையில் இன்று காரசார விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.
- சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை:
இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை ஏற்று இருதரப்பிலும் ஆதாரங்கள் இன்று வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி விவகாரத்தில் 12 நாட்களுக்கு பின்னர் FIR பதிவு என்பதற்கான ஆதாரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் சென்று சபாநாயகரிடம் வழங்கினர்.
இதையடுத்து, இருதரப்பினரும் அளித்த ஆதாரங்களை ஆராய்ந்து பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சபாநாயகர் பேச்சுக்கு சட்டசபையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.


அதில் பாலியல் சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை தொடர்புபடுத்தி பேசி இருந்தார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர்.
எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் போலீஸ் விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அன்று நக்கீரன் கோபாலின் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். நக்கீரன் கோபால் வெளியூரில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று நக்கீரன் கோபால் விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் வருகிற 25-ந்தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரன் பத்திரிகையில் வெளியான தகவல்களை மையமாக வைத்தே அவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #PollachiAbuseCase #CBCID #NakkheeranGopal

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது பல்வேறு தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த கல்லூரி மாணவி விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும்.
எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் அவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படுவார்.
பாண்டியராஜன் இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணின் கன்னத்தில் சர்ச்சையில் சிக்கி இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயர் வெளியிட்ட சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். #PollachiAbuseCase
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நெல்லையில் விசாரணை நடத்தியது.
வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் பங்கேற்று விசாரணை மேற்கொண்டார்.
இதில் 56 வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் கொடுமை விவகாரத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிட்டு சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். மேலும் காவல்துறை சரியான முறையில் செயல்படுகிறார்களா? இல்லையா? என எங்களது ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சமூக ஆர்வலர்களோ புகார் அளித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டாலும் பல காரணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நியாயமாக இருக்கும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆணையம் நம்புகிறது, அப்படி சரியான முறையில் காவல்துறை செயல்படாவிட்டால் ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவினை பிறப்பிக்கும்.
ஏற்கனவே மகளிர் ஆணையம் தலையிட்டு அறிக்கை கேட்டு உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் பொது சேவையில் அஜாக்கிரதையாக செயல்பட்டால் தான் மனித உரிமை ஆணையம் தலையிட முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.
குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






