என் மலர்
செய்திகள்

முன்ஜாமீனுக்கு அவசியமில்லை - நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது ஐகோர்ட்
பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதால் நக்கீரன் கோபால் இங்கு முன்ஜாமீன் பெறவேண்டிய அவசியமில்லை எனக்கூறி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #PollachiAbuseCase
சென்னை:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் அளித்துள்ள புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க நக்கீரன் கோபால் நேற்று முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதால் நக்கீரன் கோபால் இங்கு முன்ஜாமீன் பெறவேண்டிய அவசியமில்லை எனக்கூறி, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #PollachiAbuseCase
Next Story






