என் மலர்
நீங்கள் தேடியது "TN Cabinet"
- நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-
* கொரோனா தொற்றில் இருந்து தமிழக அரசு மீண்டு பொருளாதாரத்தில் இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
* இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக உள்ளது.
* நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* தமிழக அரசின் புதிய திட்டம் ஒன்றை பற்றி பேசுவதற்காக வந்துள்ளேன்.
* உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், காலை உணவு, தாயுமானவர் திட்டம் என அனைத்து திட்டங்களாலும் பெருமை.
* மக்கள் வரியிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு பயனுள்ள திட்டங்களையே செயல்படுத்துகிறோம்.
* ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
* 'உங்க கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவினை தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
* தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்றுஅவர்களின் கனவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள்.
* தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்களின் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
* மேலும், இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம். அயலக தமிழர்களிடமும் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறிய உள்ளோம்.
* செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும்.
* உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் கனவை அறிய முயல்கிறோம்.
* அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தீட்டப்படும்.
* 2030-ம் ஆண்டிற்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக உங்க கனவை சொல்லுங்க திட்டம்...
* 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை வருகிற 9-ந்தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
* ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி மக்களின் கனவுகளை கேட்டறிய உள்ளதாக கூறினார்.
- ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
- முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டததில் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
இந்தாண்டின் முதல் கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
- கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
- சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டு முதல்முறையாக கூடும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசின் உரையை கவர்னர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- அமைச்சர் ரகுபதி கனிமவளத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சர்கள் 2 பேர் இலாகாக்களை திடீரென மாற்றி அமைத்து உள்ளார்.
அதன்படி அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை மாற்றப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையுடன் சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார். அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை (இயற்கை வளத்துறை) அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டது.
கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைத்த போது பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோரை எடுத்து விட்டு உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி செழியனை நியமித்தார். செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை மின்வாரியத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடமும், மதுவிலக்கு ஆயத் தீர்வை இலாகாவை அமைச்சர் முத்துசாமியிடம் பிரித்து கொடுத்து இருந்தார். இப்போது மீண்டும் ரகுபதியிடம் இருந்த இலாகாவை மாற்றி அமைத்து உள்ளார்.
தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
- வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்றார்.
மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறையை கவனித்துக் கொண்ட நிலையில் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
- அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
- கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
நாளை காலையில் சட்டசபையில் சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவல்கள் நாளை பிற்பகலில் நிறைவடைந்துவிடும்.
அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
- தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும்.
- முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது. பேனா சின்னம் அமைக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்.
- ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதில் உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் வரிசையில் துரை முருகன், ஐ.பெரியசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார்.
அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரலை பட்டியலிட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதில் பல்வேறு தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிகிறது. தமிழக சட்டசபை அடுத்த வாரம் 9-ந்தேதி கூடும் நிலையில் அரசின் திட்டங்கள், புதிய கொள்கை முடிவுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள், அரசின் நிலைப்பாடுகள் சட்டசபையில் கவர்னர் உரையில் இடம்பெறும் என்பதால் இன்றைய அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
- வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு பயணம் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக கொண்டு வந்த தனித்தீர்மானம், ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த 12 மணி நேர வேலை திருத்த சட்டம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை மே 2-ந்தேதி கூடுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு பயணம் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதற்கேற்ப பணியாற்றும் வகையில், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.






