என் மலர்

  நீங்கள் தேடியது "TN Budget"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐராவதம் மகாதேவன் நூல்கள் அரசுடமையாக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNAssembly #Edappadipalaniswami
  சென்னை:

  சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சர். பி.டி. தியாகராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ஜராவதம் மகாதேவனின் நூல்கள் அரசுடைமையாக்குவது தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-

  வெள்ளுடை வேந்தர் சர். பி.டி. தியாகராஜருக்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஏற்கனவே அரசு சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

  ஐராவதம் மகாதேவன் அவர்களது நூல்களை அரசுடைமையாக்க ஏற்கனவே என்னால் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #Edappadipalaniswami
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #DMKWalkout #TNAssembly
  சென்னை:

  சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொங்கல் பரிசுக்கான நிதி தொடர்பாக அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  வெளிநடப்பு செய்த பின்னர், திமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பொன்முடி எம்எல்ஏ கூறியதாவது:-  ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கியது தொடர்பான நிதி கணக்கில் தவறு உள்ளது. மொத்தம் உள்ள 2.01 கோடி ரேசன் கார்டுகளுக்கும் தலா 1.000 ரூபாய் வழங்கினால்கூட, 2010 கோடி ரூபாய் தான் ஆகும்.

  இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,985 கோடி ஒதுக்கிய நிலையில், துணை பட்ஜெட்டில் பொங்கல் பரிசுக்காக ரூ.2019.11 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடு குறித்து கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, வெளிநடப்பு செய்தோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் முதல் முறையாக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. #DMKWalkout #TNAssembly
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami #TNAssembly
  சென்னை:

  சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

  சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே பெரிய, ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மூன்று பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜ பாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கவும், இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும், மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களுக்கும், அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  “மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளைக் கொண்டு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய உறை விந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்” என்று துணை முதலமைச்சர் தனது 2019-2020ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்த உறைவிந்து உற்பத்தி நிலையம் இந்த வளாகத்திலேயே அமையப் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மிகப்பெரிய அளவில் இப்பூங்கா அமைக்கப்படுவதால், இதனை நிர்வகிப்பதற்கு, தொடர்புடைய துறை இயக்குநர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் அம்மாவின் பெயரால் அமைந்துள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள் ஆகியோரை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக கொண்டு, ஒரு சங்கம் அமைக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தினசரி நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami #TNAssembly
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #TNAssembly #MKStalin #Thangamani
  சென்னை:

  சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் மின் கசிவு இல்லாத புதைவிட மின் கம்பிகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலமுறை இந்த சபையில் நான் வற்புறுத்தி இருக்கிறேன்.

  இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். என்றாலும் இதுவரை அந்த பணிகள் நடைபெறவில்லை. புதைவிட கம்பிகளை அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

  நான் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் குழுவை அமைத்து ஆலோசனை செய்து மாநகராட்சி பணிகளை முடித்தோம்.

  அதுபோன்று ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்து கொளத்தூர் பகுதியில் புதை வடம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க அமைச்சர் ஏற்பாடு செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

  இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

  சாலைகளை தோண்டி மின் கம்பி புதை வடங்களை புதைக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ஒரு இடத்தில் தோண்டும் போது தொலைபேசி கம்பி சிறிதளவு பாதிக்கப்பட்டதற்கு அந்த துறையினர் ரூ.60 லட்சம் நஷ்டஈடு கேட்டனர்.

  இது போன்ற காரணங்களால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி முடிக்கப்படும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, “சென்னையில் மொத்தம் 13 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதில் 6,500 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. மற்ற பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

  தாம்பரம் பகுதியில் 1230 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதற்காக 443 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் புதைவிட கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும்.

  இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #MKStalin #Thangamani
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2000 என்ற திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை என்று சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #TNAssembly
  சென்னை:

  சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பொன்முடி (தி.மு.க.) பேசினார். அவர் கூறியதாவது:-

  முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். தேர்தலுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இதன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது நிழல் பட்ஜெட் என்பதும், முதல்- அமைச்சர் வெளியிட்டது நிஜ பட்ஜெட் என்றும் தெரியவருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.

  நாங்கள் அறிவிக்கும் பட்ஜெட் நிஜம் என்பதால் தான் அம்மாவின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். உங்கள் (தி.மு.க.) ஆட்சியில், நீங்கள் அறிவித்ததுதான் நிழல் பட்ஜெட், எனவே நிஜ பட்ஜெட்டுக்கு மக்கள் ஆதரவு அளித்து எங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் என்றார்.

  இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

  நாங்கள் அறிவித்த திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை உறுப்பினர் தெரிவிக்க வேண்டும், கஜா புயலில் ஆயிரக்கணக்கான ஏழைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது.

  தேர்தலுக்காக அல்ல. அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த உதவி கிடைக்கும். அந்த கட்சி, இந்த கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ரூ.2000 உதவி கிடைக்கும்.  இந்த திட்டத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? என்பதை சொல்ல வேண்டும்.

  பொன்முடி:- இந்த திட்டத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதில் வேறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்தபோது இதை ஏன் அறிவிக்கவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி என்றார்.

  (தொடர்ந்து பொன்முடி சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். இருவரது கருத்துக்களையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அறிவித்தார்).

  பொன்முடி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும், கரும்பு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அமைச்சர் செல்லூர் ராஜூ:- 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் குறைந்த அளவுதான் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அம்மா ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  கூட்டுறவு கடன் வாங்கிய விவசாயிகளில் 83.62 சதவீதம் பேர் கடன்களை திருப்பி செலுத்தி இருக்கிறார்கள். யாரும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களைத்தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

  துரைமுருகன்:- 2006-ல் ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்வதாக தி.மு.க. அறிவித்தது. அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து அதற்கான உத்தரவுகளையும் அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம்.

  அமைச்சர் செல்லூர் ராஜூ:- ரூ.7,000 கோடியை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. குறைந்த அளவு பணத்தைத்தான் தள்ளுபடி செய்தீர்கள்.

  மு.க.ஸ்டாலின்:- நாங்கள் சொன்னபடி அனைத்து விவசாயிகளுக்கும் கடன்களை தள்ளுபடி செய்தோம். அந்த தொகை ஒருவேளை குறைவாக இருக்கலாம். அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விட்டோம் என்பதுதான் உண்மை.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ரூ.7,000 கோடி என்று சொல்லிவிட்டு ரூ.5,000 கோடி கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத்தான் அமைச்சர் கூறுகிறார். அம்மாவின் ஆட்சியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அரசு பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.3,200 கோடி பெற்றுத் தந்து இருக்கிறோம். விவசாயிகள் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

  சட்டசபையில் இன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இறப்புக்கு, ஈமச்சடங்கு மானியம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

  நேற்றையதினம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி சரியாக போய் சேரவில்லை என்ற ஒருகருத்தை இங்கே சொன்னார். அதற்கு விளக்கத்தைதர விரும்புகின்றேன்.

  ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களில் எவரேனும் இறந்தால் அன்னாரின் இறுதிச் சடங்கு செலவுகளுக்காக இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது.

  இதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடநலத்துறைக்கு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்கிறது. இத்திட்ட நிதியினை ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், கோயம்புத்தூர், திருப்பூர் மாநகராட்சிகளுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

  2018-19-ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடி ரூபாயில் இதுவரை 4.67கோடி ரூபாய்உதவித் தொகை 18,692 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க் கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். ஏதேனும் ஈமச்சடங்குநிதி முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி இருக்கின்றார்களா?

  அப்படி ஏதாவது புகார் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஈமச்சடங்கு நிதி உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க் கட்சிதுணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  2018-19-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டநிதி 5 கோடி ரூபாய். ஆகவே, அதிலே மீதி இருக்கிறது. 4.67 கோடி ரூபாய் தான் செலவழிக்கப்பட்டு இருக்கின்றது. 18,692 நபர்கள் அதற்கு மனு செய்திருக்கின்றார்கள், விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள்.

  இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கப்படுகின்றது. ஏதேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் அதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால், அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த திட்டத்தை நிறைவேற்றுவதே உள்ளாட்சித் துறை. நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஊரகவளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள்தான், இந்த ஈமச்சடங்கு நிதியை அளிக்கின்றார்கள்.

  ஆகவே, அதில் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் சுட்டிக்காட்டினால், யாருக்காவது ஈமச்சடங்குநிதி கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவர்களுக்கு நிதி கிடைக்கப் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami #TNAssembly
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
  ஒட்டன்சத்திரம்:

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

  கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.

  தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  செம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாரயாணசாமிக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கைகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 58 வயது வரை அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.  மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.

  இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

  அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

  துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.

  தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.

  இவ்வாறு அவர் கூறினார். #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS
  சென்னை:

  தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

  மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விளிம்பு உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக 2018-2019-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

  தசைச் சிதைவு நோயினால் பாதிப்படைந்தோர், முதுகுத் தண்டு வடம் பாதிப்படைந்தோர், மூளை முடக்குவாதத்தினால் பாதிப்படைந்தோருக்காக, தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள், இரு கால்கள் பாதிப்படைந்தோருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போன்ற நவீன உதவி உபகரணங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதாகவும், தன்னிச்சையாக இயங்குவதற்காகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

  தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு 2019-2020-ம் ஆண்டிற்கு இதற்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு 3 ஆயிரம் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 3 ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.

  இது தவிர செவித்திறன் பாதிப்படைந்தோருக்கான காதுக்குப்பின் அணியும் காதொலிக் கருவிகளும், பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான உயர் தொழில் நுட்ப ஊன்று கோல்களும் வழங்கப்படுகின்றன. 2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 572.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TNBudget2019 #Budget2019 #OPS
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தது உதவாக்கரை பட்ஜெட் என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #TNBudget #OPS #MKStalin
  சென்னை:

  தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2019- 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தது உதவாக்கரை பட்ஜெட்.  ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத வகையில் தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது.

  பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் சொன்னதையை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார். நிதி ஒதுக்கீட்டை விளம்பரத்திற்காக செய்து விட்டு அதை இந்த அரசு அமல்படுத்தவில்லை.

  உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு முன் வரவில்லை. உள்ளாட்சிக்கான நிதியை மத்திய அரசு வழங்காததற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே காரணம்.

  வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

  விவசாயிகளை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. வாங்கிய  கடனுக்கான வட்டியை செலுத்தக்கூடிய வகையில் பட்ஜெட் உள்ளது.

  விவசாயிகளுக்காகவும், அரசின் வருவாயை பெருக்குவதற்காகவும் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.

  கொடநாட்டில் கொள்ளையடித்தது போல தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.   #TNBudget #OPS #MKStalin
  ×