என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
    X

    இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு

    • கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

    * அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    * தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    * கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    * 84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    * கோவிலுக்குச் சொந்தமான 8111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    * தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * 120 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    * சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

    * அதிகம் அறியப்படாத 22 சுற்றுலா தலங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    * தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    * மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசின் தலையாய நோக்கம்.

    * மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    * நடப்பாடிண்டில் 14.89 லட்சம் மெட்ரின் டன், 5 ஆண்டுகளில் 2.15 கோடி மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    * தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட்டுறவு உணவு நுகர்வோர் துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * 45 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.57 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    * தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.4,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * கூட்டுறவு வங்கிகளில் ரூ.12,359 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    * மீனவர்களின் நலனுக்கும் நல வாழ்வுக்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

    * இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    * தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் தொகை ரூ.8000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×