கோவையில் 2 சந்தனமரங்கள் வெட்டி கடத்தல்

நடைபயிற்சிக்கு சென்றவர் மாயமானது கண்டு அதிர்ச்சி கடத்தல் கும்பல் கைவரிசையா? போலீசார் விசாரணை
கோவையில் 2 சந்தனமரங்கள் வெட்டி கடத்தல்
Published on

வடவள்ளி.

கோவை குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-1 பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகள் பழமையான 2 சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.இந்த நிலையில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் இன்று காலை நடைபயிற்சிக்கு வந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த 2 சந்தனமரங்கள் மாயமானது தெரியவந்தது.

எனவே அதிர்ச்சி அடைந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது யாரோ சிலர் மைதானத்தில் இருந்த 2 சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன. எனவே அந்த குற்றவாளிகள் தான் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டனரா என்று தெரியவில்லை.இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com