search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice seized"

    • கேரளாவுக்கு லாரியில் கடத்திய 1,120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் வாகன தணிக்கை சோதனைகளை போலீசார் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சாப்டூர்- பேரையூர் ரோட்டில் மதுரை மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு ஒரு லாரி வந்தது. அதில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனை செய்து பார்த்தனர்.

    அதில் 40 கிலோ கொண்ட 28 மூடைகள் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் லாரியில் கடத்தி வந்த 1120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பாரதிராஜா (வயது 25), அய்யனார்புரம் கனிமாரி (25) என்பது தெரிய வந்தது.

    வில்லாபுரம் பாரதிராஜா ரேசன் அரிசிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பதற்காக அய்யனார்புரம் டிரைவர் கனிமாரி என்பவரை கூட்டு சேர்த்துக் கொண்டு ரேசன் அரிசியை கடத்தி சென்று விற்று வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து லாரியில் ரேசன் அரிசி கடத்திச் சென்றதாக பாரதிராஜா, கனிமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×