கோவையில் கட்டிட பணியின் போது கல் விழுந்து மார்க்கெட்டிங் ஊழியர் பலி

கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார். 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையில் கட்டிட பணியின் போது கல் விழுந்து மார்க்கெட்டிங் ஊழியர் பலி
Published on

கோவை,

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்தவர் இனாமுல் ஹசன்(27). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார்.

காளப்பட்டி ரோட்டில் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் கட்டிட உரிமையாளர் அருண் என்பவரிடம் மார்க்கெட்டிங் சம்பந்தமாக பேசி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிட பணியின் போது கல் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இனாமுல் ஹசன் மயங்கி சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக இனாமுல் ஹசனின் தந்தை ஷாகீல் ஹமீத் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விதியை பின்பற்றாமல் கட்டிட பணியை மேற்கொண்ட கட்டிட ஒப்பந்ததாரர் ரஞ்சித் மற்றும் கட்டிட உரிமையாளர் அருண் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com