என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " கூலி தொழிலாளி பலி"

    அந்தியூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கூலி தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    அந்தியூர்:

    பவானி வருணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவானியில் இருந்து அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    கோவில் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்தார். அந்தியூரைஅடுத்த செம்புலிச்சாம்பாளையம் அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்தகாரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட மாதேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.

    சிகிச்சைக்காக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாதேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×