search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "painter death"

  • தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடலூர்:

  நெல்லிக்குப்பம் மோரை மேட்டு தெரு சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், 2சிறு வயதுகுழந்தைகளும் உள்ளனர். நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் தனியார் கல்லூரி வளாகத்தில் பெயிண்டிங் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இத்தகவல் அறிந்த மணிகண்டன் மனைவி காயத்ரி, அவரது உறவினர்கள், கவுன்சிலர் முத்தமிழன் உள்ளிட்ட பலர் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். இத் தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்த மணிகண்டன் மனைவி மற்றும் உறவினர்கள் தனியார் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணிகண்டன் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

  பரமத்திவேலூர் அருகே ராஜாவாய்க்காலில் மூழ்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பரமத்திவேலூர்:

  பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலுக்கு சென்று கரையில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்த அவர் மேலே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சண்முகவேலின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அம்பத்தூர்:

  பழைய வண்ணாரப்பேட்டை நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (55) பெயிண்டர். இவர் இன்று காலை கிழக்கு முகப்பேர் இளங்கோ தெருவில் புதிதாக கட்டிவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

  முதல் தளத்தில் உள்ள பால்கனியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மின் கம்பியின் மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரை விசாரித்தார்.

  ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் மீது ரெயில் மோதியது. இதில் அடிபட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  ஜோலார்பேட்டை:

  வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 46). பெயிண்டர். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு 3 மகள் 1 மகன் உள்ளனர்.

  சுந்தரேசன் நேற்றிரவு கோதண்டபட்டி ரெயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

  ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
  திருவொற்றியூரில் நேற்று பெய்த மழையால் குடிசை சரிந்து விழுந்து பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.
  திருவொற்றியூர்:

  திருவொற்றியூர் குப்பத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (40). பெயிண்டர்.

  மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் திருவொற்றியூர் குப்பத்தில் உள்ள குடிசை வீட்டில் தனிமையில் வசித்தார். வழக்கம் போல் நேற்று இரவு ஓலை கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

  நேற்று பெய்த மழையால் ரமேஷ் மீது ஓலை கூடாரம் சரிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து பொதுமக்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
  முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  புதுச்சேரி:

  புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரேம்குமார் (வயது 23). பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

  நேற்று இவர் வாழைகுளம் அக்காசாமி மடம் லட்சுமி கார்டன் பகுதியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருக முயன்றபோது, எதிர்பாராத விதமாக பிரேம்குமாரை மின்சாரம் தாக்கியது.

  இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்த தொழிலாளர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரேம்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  திண்டுக்கல் அருகே அதிக போதையில் அசுர வேகத்தில் சென்றதால் விபத்தில் பெயிண்டர் பலியானார்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் சடையாண்டி (வயது 29). அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (26), திருப்பதி (39), சக்திவேல் (22) ஆகிய 4 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  நேற்று மாலை வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு 4 பேரும் வீட்டுக்கு வரும் வழியில் ரெட்டியார்சத்திரம் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர். போதையில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த போது இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றனர்.

  அப்போது எதிர்பாராத விதமாக தவறி 4 பேரும் கீழே விழுந்தனர். இதில் சடையாண்டிக்கு தலையில் பலத்தஅடிபட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்த சக்திவேலை தேடி வருகின்றனர். பைக்கில் வந்த மற்ற 2 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

  மயிலாடுதுறை அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார்.
  மயிலாடுதுறை:

  நாகை மாவட்டம் தரங்கம்பாடி வடகரை இடையாளூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பசிரூதீன் (வயது 38), பெயிண்டர்.

  இவர் இன்று காலை சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வைத்தீஸ்வரன் கோவில் அருகே சென்ற போது 2 மாணவர்கள் லிப்ட் கேட்டனர்.

  மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விக்னேஷ் (15), விஜயகுமார் (15) ஆகியோர் பசிரூதீனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

  அவர்கள் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை அருகே சேந்தகுடி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் மோதியது. இதில் பசிரூதீன் சம்பவ இடக்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

  மேலும் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற விக்னேஷ், விஜயகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த விபத்து பற்றி மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான பசிரூதீன் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

  சிற்றார் அணை தண்ணீரில் மூழ்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

  அருமனை:

  குலசேகரம் பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 30). பெயிண்டர். நேற்று இவர் தனது நண்பர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சிற்றார்-2 அணைப் பகுதிக்கு குளிக்கச் சென்றார்.

  அப்போது ராஜூ தனது நண்பர்களிடம் நான் ஒரு தனியார் தோட்டம் வழியாக அணைக்கு சென்று அங்கிருந்து அணையில் குதித்து மறுகரைக்கு வருகிறேன். நீங்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

  அணையில் குதித்து மறுகரைக்கு செல்ல முயன்ற ராஜூ திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவர் உயிருக்கு போராடுவதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தண்ணீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராஜூ நீரில் மூழ்கி மாயமானார்.

  இதுபற்றி அவரது நண்பர்கள் கடையாலுமூடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெகுநேரமாக தேடியும் ராஜூவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் இரவாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

  இன்று 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சிற்றார்-2 அணைக்கு சென்று ராஜூவை தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு ராஜூ பிணமாக மீட்கப்பட்டார்.

  அவரது உடலை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ராஜூ உடலை போலீசார் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

  இந்த சம்பவம் அருமனை, குலசேகரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  குலசேகரம்:

  குலசேகரம் அருகே செருப்பாலூர் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 27). இவர் பெயிண்டராக வேலை செய்துவந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் சஜிகுமார். இவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.

  நேற்று மாலை ஸ்ரீகண்டனும், சஜிகுமாரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செருப்பாலூரில் இருந்து குலசேகரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை சஜிகுமார் ஓட்டினார். ஸ்ரீகண்டன் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

  அவர்கள் குலசேகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே குலசேகரத்தில் இருந்து செருப்பாலூர் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக அந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

  இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீகண்டன், சஜிகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

  இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

  இதில் சஜிகுமார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீகண்டன் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஸ்ரீகண்டன் இறந்துவிட்டார். சஜிகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த விபத்து பற்றி குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  தற்போது விபத்து நடந்து உள்ள பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

  ×