என் மலர்
நீங்கள் தேடியது "motor cycle accident"
- லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் (வயது58). இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் பதவி வகித்து வந்தார்.
எண்ணகோள்புதூர் பகுதியைச் சேர்ந்தவரும், ஓ.பி.எஸ் அணியின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சகாதேவன் (63).
இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.
இதில் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சகாதேவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ராஜாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது45). தர்காவில் அஜிரத்தாக உள்ளார். இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
கூவத்தூர் அடுத்த பெருந்துறவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே பெருங்குடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகுல்(23) மற்றும் அவரது நணபர் ஒருவர் என 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இப்ராகிம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.
மோட்டார் சைக்கிளில் வந்த இப்ராகிம் மற்றும் என்ஜினீயர் ராகுல் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராகுலுடன் வந்த அவரது நண்பர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வாலிபருக்கும் அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.
- தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59), விவசாயி. இவர் அவரது உறவினர் ராமசாமி(61) என்பவருடன் காங்கயத்திற்கு சென்று விட்டு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் முள்ளிப்புரத்திற்கு புறப்பட்டனர்.
காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ், ராமசாமி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்ததும் எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் விவசாயி உள்பட 2பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெனடிக்ட் அந்தோணி ராஜ் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.
- பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
நெல்லை:
பாளை செயின்ட்பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் அந்தோணி ராஜ்(வயது 47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் ஓட்டலும் நடத்தி வந்தார்.
கடந்த 7-ந்தேதி இவர் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பெனடிக்ட் அந்தோணிராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
கோவூர், லட்சுமி நகரில் உள்ள பாபு கார்டன் பகுதியில் வசித்தவர் பிரபின் (வயது.31). இவர் சென்னை வியாசர்பாடியில் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார்.
இவர் அச்சரப்பாக்கம் அருகே வசிக்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் அவர் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு படூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொயிலாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிலபீடிகா அருகே இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
- விபத்தில் பலத்த காயமடைந்த 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
திருவனந்தபுரம்:
கோழிக்கோடு அருகே உள்ள வடகரை, குற்றியடி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 18). இவரது நண்பர் தீக்சித் (18). இவர்கள் இருவரும் புதியப்பாவில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
கொயிலாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிலபீடிகா அருகே அவர்கள் வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- நடுவக்குறிச்சி சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வேலப்பநாடாரூர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் ஜீவானந்தம்(வயது 24).
நாய் குறுக்கே பாய்ந்தது
இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். தினமும் வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
நடுவக்குறிச்சி சாலையில் சென்றபோது எதிர்பாரா தவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதனால் ஜீவானந்தம் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நாய் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜீவானந்தம் படுகாயம் அடைந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவரது உறவின ர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளை கோட்டூரை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் கங்கைகொண்டானில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்
- நான்கு வழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளுடன் விழுந்த நிலையில் மயங்கி கிடந்தார்
நெல்லை:
பாளை கோட்டூர் பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 32). இவர் கங்கைகொண்டானில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது பெற்றோருடன் லட்சுமி காந்தன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று கம்பெனிக்கு வேலைக்கு சென்ற லட்சுமி காந்தன் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது லட்சுமி காந்தன் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி காந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி காந்தன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டீனாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 24). இவர் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து முடித்து அங்குள்ள விடுதியில் தங்கி பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் புதுவை பல்கலைக்கழக விடுதியில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நண்பரை சந்தித்து பேசி விட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சின்ன காலாப்பட்டில் வந்த போது கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே பெரிய காலாப்பட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உமாநாத் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக் கொண்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட கோபாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உமாநாத்துக்கும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார். உமாநாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி, ஏட்டு தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த டாக்டர் கோபாலகிருஷ்ணனின் தாயும் சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சங்கரநாராயணன் தம்பதியினருக்கு கோபால கிருஷ்ணன் ஒரே மகன் ஆவார்.
கோபாலகிருஷ்ணன் பயிற்சி முடித்ததும் சென்னையில் தனியாக கிளினிக் தொடங்க அவரது பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இறந்து போனதால் அவரது உடலை பெற்றோர் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள செந்துறை கக்கன் காலனியை சேர்ந்தவர் முத்து பழனி. அவரது மகன் மணிகண்டன். (வயது 22). சென்னையில் என்ஜினீயராக உள்ளார்.
இவர் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கு வந்து உள்ளார். இவரது பாட்டி வீடு மோர்பட்டியில் உள்ளது. எனவே பாட்டியின் நினைவு நாளை கடைபிடிப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் மோர்பட்டிக்கு சென்றார்.
பின்னர் இரவு நேரத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். செந்துறை அருகே அய்யனார் அருவி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் புளியமரத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை இரவு நேரத்தில் யாரும் பார்க்கவில்லை. எனவே பரிதாபமாக மணிகண்டன் இறந்தார்.
இரவு முழுவதும் மணிகண்டன வீடு திரும்பவில்லை என்று அறிந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் சாலை ஓரத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள்.