அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னை கண்டக்டர் பலி

பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னை கண்டக்டர் பலி
Published on

மதுராந்தகம்:

கோவூர், லட்சுமி நகரில் உள்ள பாபு கார்டன் பகுதியில் வசித்தவர் பிரபின் (வயது.31). இவர் சென்னை வியாசர்பாடியில் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார்.

இவர் அச்சரப்பாக்கம் அருகே வசிக்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் அவர் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு படூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றார்.

பின்னர் திரும்பி வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com