கோழிக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் மரணம்

கொயிலாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிலபீடிகா அருகே இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. விபத்தில் பலத்த காயமடைந்த 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
கோழிக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் மரணம்
Published on

திருவனந்தபுரம்:

கோழிக்கோடு அருகே உள்ள வடகரை, குற்றியடி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 18). இவரது நண்பர் தீக்சித் (18). இவர்கள் இருவரும் புதியப்பாவில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

கொயிலாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிலபீடிகா அருகே அவர்கள் வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com