search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே  மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
    X

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாளை கோட்டூரை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் கங்கைகொண்டானில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்
    • நான்கு வழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளுடன் விழுந்த நிலையில் மயங்கி கிடந்தார்

    நெல்லை:

    பாளை கோட்டூர் பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 32). இவர் கங்கைகொண்டானில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது பெற்றோருடன் லட்சுமி காந்தன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று கம்பெனிக்கு வேலைக்கு சென்ற லட்சுமி காந்தன் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாழையூத்து அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது லட்சுமி காந்தன் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி காந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி காந்தன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×