search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூவத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து-  2 பேர் பலி
    X

    கூவத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து- 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது45). தர்காவில் அஜிரத்தாக உள்ளார். இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    கூவத்தூர் அடுத்த பெருந்துறவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே பெருங்குடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகுல்(23) மற்றும் அவரது நணபர் ஒருவர் என 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இப்ராகிம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.

    மோட்டார் சைக்கிளில் வந்த இப்ராகிம் மற்றும் என்ஜினீயர் ராகுல் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராகுலுடன் வந்த அவரது நண்பர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வாலிபருக்கும் அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×