என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealer death"

    பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாத்திர வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கோணப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 60). இவரது மகன் முருகன் (வயது 42). இவர் மொபட்டி வண்டியில் பாத்திரங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். முருகனும், அவரது தாயார் ரஞ்சிதமும் மொபட்டில் மகேந்திர மங்கலத்தில் உள்ள உறவினரின் மகனை அழைத்து வருவதற்காக சென்றனர். அப்போது செல்லும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து முருகன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத் தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    ரஞ்சிதத்திற்கு தொடர்ந்து சிகிசசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை வம்பாகீரப்பாளையத்தில் விஷப்பூச்சி கடித்ததில் வியாபாரி பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத் (வயது26). இவர் புதுவை புல்வார் பகுதியில் தள்ளுவண்டி மூலம் சமைத்த கோழிஇறைச்சி மற்றும் மீன்-மூட்டை பஜ்ஜி போன்ற வகைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சரத் வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது தன்னை விஷப்பூச்சி கடித்து விட்டதாக கூறி திடீரென மயங்கி விழுந்தார். 
    உடனே அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சரத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சரத் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து சரத்தின் உடலை பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சரத் விஷப்பூச்சி கடித்து இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.

    இறந்து போன சரத்துக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. நிறைமதி என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மானூர் அருகே கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அயுப் கான்புரத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். வீடு வீடாக சென்று எண்ணை வியாபாரமும் செய்து வந்தார். நேற்று இரவு இவர் அரிசி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். 

    அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யாத்துரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யாத்துரை பரிதாபமாக இறந்தார். 

    இதுபற்றி மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வில்லியனூரில் ரெயில் மோதி கறிவேப்பிலை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ரெயில்வே கேட் அருகே நேற்று அதிகாலை ஒரு வாலிபர் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் விநாயகம் ஆகி யோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயில் மோதி பிணமாக கிடந்த வாலிபர் வில்லியனூர் பெருமாள் புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26) என்பதும், இவர் வில்லியனூர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

    அதிகாலை வேளையில் ரமேஷ் இயற்கை உபாதை கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியாகி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதி பலியான ரமேசுக்கு திருமணாகி அஞ்சலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாடகை பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்த திரும்பிய வியாபாரி மரணமடைந்ததை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தாவை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்து உள்ளனர்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்து இருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ரகுநாதன் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “நான் வாடகை பாக்கி வைத்திருந்ததால் கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகுவின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு வந்து என்னை மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகுநாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ரகுநாதனின் மனைவி தேவி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பழ வியாபாரி பலியானார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சரவணன் (வயது 26). பழ வியாபாரி. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் செவ்வாப்பேட்டை துர்க்கையம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்திசையில் பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரவணணுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    அவ்வாறு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×