என் மலர்
நீங்கள் தேடியது "male died body"
திருவாரூர்:
கொரடாச்சேரி அருகே ஒளிமதி என்ற இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகில் சம்பவத்தன்று தலையில் காயத்துடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து கொரடாச்சேரி ரெயில் நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சாவூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் காந்தி சடலத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இறந்து கிடந்தவர் கருப்பு நிற வேட்டி, ஊதா நிற பனியனும் அணிந்துள்ளார். இறந்தவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இறந்தவர் யார்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம்- பீடம்பள்ளி இடையே கல்லுக்குழி உள்ளது. இந்த கல்லுக்குழிக்குள் நிர்வாண நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக மிதந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகல்லுக்குழிக்குள் இறந்து கிடந்த வாலிபர் யார்? அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் தீயணைப்பு நிலையம் எதிரே தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையின் பின்புறம் வயல்வெளியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசியது. அவர் யார்- எந்த ஊர் என்பது தெரியவில்லை.
இது பற்றி தகவல் அறிந்ததும் மடுகரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்தும், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவரை யாராவது அடித்து கொன்று உடலை வயல்வெளியில் வீசி சென்றார்களா? அல்லது அதிக குடிபோதையில் அவர் இறந்து போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






