என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
    X

    புதுவையில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

    புதுவையில் தண்டவாளத்தில் தலையை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரெயில் இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் ரெட்டியார் பாளையத்தை அடுத்த மரியாள் நகர் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஒரு வாலிபர் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். ரெயில் வேகமாக சென்றதால் அந்த வாலிபரின் மீது ரெயில் ஏறி சென்றது. இதில் அவரது தலை துண்டானது.

    இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் உழவர்கரை வின்சென்ட் வீதியை சேர்ந்த அந்துவான் மகன் வனத்துராஜ் (28) என்பது தெரியவந்தது.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×