search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crack"

    • பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது.
    • சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பெருநாள் நேற்று [ஜூன் 17] திங்கட்கிழமை கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் டெல்லியில் ஸ்திரத்தன்மையை இழந்து மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பழைய டெல்லியில் சூடிவாலா பகுதியில் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த தெருவொன்றில் இருந்த சங்கமர்மர் என்ற பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சுதாரித்துகொண்டு அங்கிருத்தவர்கள் உடனே வெளியேறியனர். அதனைத்தொடர்ந்து மசூதியின் பெரும் பகுதி சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சரியான நேரத்தில் மசூதியிலுந்தும் அருகில் இருந்த 3 கட்டிடங்களில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள சாலை சற்று கீழிறங்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
    • பாலத்தில் உள்ள விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்

    நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.

    இந்த பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    இந்த பாலம் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் இந்த சாலை போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து பாலத்தில் விரிசல் விழுந்து வருகிறது.

    இந்த விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தேங்காய்க்கு உரிய விலை கேட்டு பல்லடம் அருகே உள்ள நாதகவுண்டம்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர்சண்முகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநிலகொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாநில பொருளாளர் தங்கராஜ்,மாநில அவைத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பிரச்சார குழுத் தலைவர் பூரண்டாம்பாளையம் மணி மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் திருப்பூர் ,கோயம்புத்தூர்,கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் என்.எஸ்.பி.நந்தகுமார் நன்றி கூறினார்.19-ம் நாளாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
    • தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கோவை, பெங்களூர் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
    • பயணிகள் அவதி

    வேலூர்:

    வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள நியூ டவுன் ரெயில்வே கேட் அருகே இன்று காலை தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது.

    இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து சென்னையில் இருந்து கோவை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    வாணியம்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து நடுவழிகளில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு அருகே உள்ள தண்டவாளத்தை இரவு 10.15 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசல் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் அவ்வழியாக வந்த கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், எர்ணாகுளம் வராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12.45 மணியளவில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில்கள் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ரெயில்கள் 2 மணி நேரம் நிறுத்தபட்டதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    ×