சீட்டுக் கட்டுபோல் சரிந்து தரைமட்டமான பழம்பெரும் மசூதி.. வைரல் வீடியோ

பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது. சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சீட்டுக் கட்டுபோல் சரிந்து தரைமட்டமான பழம்பெரும் மசூதி.. வைரல் வீடியோ
Published on

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பெருநாள் நேற்று [ஜூன் 17] திங்கட்கிழமை கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பக்ரீத் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் டெல்லியில் ஸ்திரத்தன்மையை இழந்து மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பழைய டெல்லியில் சூடிவாலா பகுதியில் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த தெருவொன்றில் இருந்த சங்கமர்மர் என்ற பழைய மசூதி கட்டடத்தில் நேற்று மதியம் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் சுதாரித்துகொண்டு அங்கிருத்தவர்கள் உடனே வெளியேறியனர். அதனைத்தொடர்ந்து மசூதியின் பெரும் பகுதி சீட்டுக்கட்டுபோல் சரிந்து தரைமட்டமாகும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சரியான நேரத்தில் மசூதியிலுந்தும் அருகில் இருந்த 3 கட்டிடங்களில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள சாலை சற்று கீழிறங்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com