search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Avinasi"

  • புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.
  • அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

  அவிநாசி:

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. 9 நாடுகளை சோ்ந்த 11 மொழிகளில் 30 திரைப்படங்கள் திரையிட்டதில், தமுஎகச., திரைப்பள்ளியில் பயிற்சி பெற்ற அவிநாசி கிளை இளைஞா்கள் பகத்சிங், ரமேஷ்கவின் ஆகிய இருவா் பங்கேற்று, 'ஜன்னல்' என்ற குறும்படமும், 'லவ்வீஸ் லவ்' ஆகிய குறும்படமும் இயக்கி வெளியிட்டனா்.

  இவா்களுக்கு தமுஎகச., மாநில பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா, மாநிலக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், திரைப்பள்ளி நிா்வாகிகள் அருள்மணி, சிவக்குமாா், களபிரன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கினா். அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

  • ஏலத்திற்கு மொத்தம் 2,367 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.
  • ரூ. 2,000 முதல் ரூ.8,019 வரையில் ஏலம் போனது.

  அவிநாசி :

  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 2,367 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.

  இதில் ஆா்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.8,019 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.48 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

  • பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் மும்முனை சந்திப்பு உள்ளது.
  • ஒரு மின்கம்பத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

  அவினாசி :

  திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, சேவூர் ரோடு என மும்முனை சந்திப்பு உள்ளது. அத்துடன் சந்திப்பு ரோடு பகுதியில் பேக்கரி ஒட்டல்.

  ஜவுளி, நகை கடைகள் வங்கி என ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளது. பள்ளி கல்லுரிக்கு செல்லும் வாகனங்கள, காரி, லாரி, அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆயிரகணக்கான இருசக்கர வாகனங்கள் என எந்த நேரமும் மும்முனை சந்திப்ப ரோட்டில் போய் வருகின்றன. சந்திப்பு ரோட்டில் உள்ள ஒரு மின்கம்பத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.அந்த கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வார்கள் பல ஆண்டுகளாக மின் வாரிய அலுவலகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் நேற்று போக்கு வரத்திற்கு இடையூராக இருந்த மின்கம்பத்தை மின்வாரிய அலுவலர்கள் மாற்றி அமைத்தனர்.

  • பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
  • 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.

  அவினாசி :

  அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தையல்,அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகு கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுதுநீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்கல் போன்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தால் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்த பயிற்சியில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.

  பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மூலம் 1500 காலி பணி இடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் திறன் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மட்டும் முகாமிற்கு வரும்பொழுது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 ஆகியவை எடுத்து வர வேண்டும். இந்த தகவலை தமிழ் நாடு ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

  இதற்கான ஏற்பாட்டை பல்வேறு அரசு தொழில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதம மந்திரி கவுசல்விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் செய்து வருகிறது. 

  • ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  அவினாசி :

  அவினாசி வட்டம் இந்திரா காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, அங்கன்வாடி பணியாளர் பிரியங்கா, ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் பேசுகையில்,குழந்தைகள் உள்ளிட்ட பெரியோர்கள் ஊட்டச்சத்துமிக்க காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை தினசரி சாப்பிட்டு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்றனர்.

  • வீட்டை பூட்டிவிட்டு தோட்டவேலைக்கு சென்றுவிட்டார்.
  • கம்மல், கால்கொலுசு மற்றும் பத்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  அவினாசி :

  அவினாசியை அடுத்து நடுவச்சேரி அங்காளம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மனோன்மணி ( வயது 47) .கூலி தொழிலாளியான இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டவேலைக்கு சென்றுவிட்டார்.

  பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியுற்றார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 1/2 பவுன் கம்மல், கால்கொலுசு, மற்றும் காட்டு பத்திரம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.

  அவினாசி :

  பா.ஜ.க., அவினாசி நகர மண்டல கூட்டம் அவினாசி சக்தி நகரில் உள்ள அரங்கில் நடந்தது. இதில்சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட பொதுசெயலாளர் ருத்ரசாமி கலந்து கொண்டு ஆய்வு மேற்க்கொண்டார், நகர நிர்வாகிகள், கிளை தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஆகியோர்களின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி வரும் காலங்களில் கட்சியினரின் செயல்பாடு, பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது, தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

  இக்கூட்டத்தில் அவினாசி நகர தலைவர் தினேஷ்குமார், நகர பார்வையாளர் உதயகுமார், பொதுசெயலாளர்கள் விஜயகுமார், மோகன்குமார், நகர பொருளாளர் ரமேஷ்குமார், துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், நந்தகுமார், சித்ரா, விஜயலட்சுமி, நகர செயலாளர்கள் தனசேகரன்,பைரவன் உட்பட நகர,அணி, நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

  • கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது.
  • 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம் பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது.

  அவினாசி :

  கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு அவினாசியில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது. கோவில் முன் 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம்பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை 7 மணி முதல் ஏராளமான வாலிபர்கள் தொடர்ந்து வழுக்குமரம் ஏறி இரவு 9 மணியளவில் பணமுடிப்பை அவிழ்த்து எடுத்தனர்.

  இதையடுத்து நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்துகொண்டு உறி அடித்தனர்.முன்னதாக நேற்று காலை கரிவரதராஜப்பெருமாளுக்கு விசேச பூஜை திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. இரவு 9.30 மணியளவில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
  • தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

  அவினாசி :

  75ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகள் வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 13, 14, 15, ஆகிய நாட்கள்தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

  அதன்படி அவினாசி பேரூராட்சி அலுவலகம் ,தாலுகா அலுவலகம், பழங்கரை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அலுவலகங்கள், ஓட்டல்கள், மற்றும் ஏராளமான வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி பொதுமக்கள் சுதந்திர தினமகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

  • கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
  • அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  அவினாசி :

  அவினாசி ஒன்றியம் பழங்கரை கமிட்டியார் காலனியில் ஓய்வு பெற்ற நில அளவையாளர் சாமிநாதன், அதே பகுதியில் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டின் கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மேலும் அப்பகுதியில் சி.சி.டி.வி.கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே ஒருவர் செல்போனில் பேசிய படி திரும்பி, திரும்பி பார்த்தவாறு அங்கும் இங்கு மாக நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது. இரு வீடுகளும் பூட்டியிருப்பதை உளவு பார்த்து திட்டமிட்டு திருட்டு நடந்திருக்கலாம் என்றும் திருடி சென்ற நபர்களில் சி.சி.டி.வி .கேமராவில் பதிவாகியுள்ள நபரும் ஒருவராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கமிட்டியார் காலனி பகுதி, திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.