search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bald tree climbing"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்.
    • சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன.

    * குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னை கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்.

    * குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர்.

    *ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.

    * கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஒருநாள் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப்பற்றிக் குறை கூறினார்கள்.

    'அம்மா! உங்கள் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித் தின்கிறான். உரலின் மீதேறி, உரியில் உள்ள பானைகளைக் குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்' என்று புகார் செய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அப்பாவியாய் நடித்து தாயை நம்ப வைத்தார்.

    * ஒருமுறை வெண்ணெய் திருடும்பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகக் கூறினார். தான் துடைத்து விடுவதாகக் கூறினார். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.

    அங்கு வந்த யசோதையிடம், 'அம்மா! இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெ யைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறாள். இவளது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்' என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, 'நீ தவறு செய்துவிட்டு என் குழந்தைமீது பழி போடுகிறாயா?' என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகர வேணி 'அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெ யைத் தடவி விட்டு ஏமாற்றுகிறான்' என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.

    * ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, 'கிருஷ்ணா! நீ மண்ணைத் தின்றாயா?' என்று அதட்டிக் கேட்டாள். 'இல்லை யம்மா' என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான். ' அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு' என்றாள் யசோதை. கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது.

    சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளி கைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பில் இருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இது போன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.

    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    • அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    கிருஷ்ண பரமாத்மாவை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

     பூஜை செய்யும் முறை

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக் கண்ணனின் பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம்.

    அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும். துவாதச மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    • ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
    • ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும். சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும்.

    பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றில் இருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள். ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல் களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் 'ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள். முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.

    பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    • கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது.
    • 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம் பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது.

    அவினாசி :

    கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு அவினாசியில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது. கோவில் முன் 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம்பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை 7 மணி முதல் ஏராளமான வாலிபர்கள் தொடர்ந்து வழுக்குமரம் ஏறி இரவு 9 மணியளவில் பணமுடிப்பை அவிழ்த்து எடுத்தனர்.

    இதையடுத்து நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்துகொண்டு உறி அடித்தனர்.முன்னதாக நேற்று காலை கரிவரதராஜப்பெருமாளுக்கு விசேச பூஜை திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. இரவு 9.30 மணியளவில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ×