என் மலர்
நீங்கள் தேடியது "அவினாசி"
- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.
- மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.
திருப்பூர் :
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- காட்டு மாரியம்மன் கோவில் வரை உள்ள தார்ச்சாலைக்கு தலைவர் தண்டபாணி சாலை என பெயர் சூட்டப்பட்டது.
- ஊராட்சி பகுதி முழுவதும் அரசன், வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான எம்.தண்டபாணி நினைவாக நடுவச்சேரி ஊராட்சி வரதராஜ் நகர் முதல் வளையபாளையம் வழியாக ராயபாளையம் காட்டு மாரியம்மன் கோவில் வரை உள்ள தார்ச்சாலைக்கு தலைவர் தண்டபாணி சாலை என பெயர் சூட்டப்பட்டது.
மேலும் அந்த சாலையில் கல்வெட்டு நிறுவப்பட்டது. பெயர் சூட்டுவிழா நிகழ்ச்சியில் நடுவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கே.சி.வரதராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்துசாமி, ஊராட்சி செயலாளர்கள் ரங்கசாமி, மணிகண்டன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சின்னேரிபாளையம் ஊராட்சி பகுதி முழுவதும் அரசன், வேம்பு, புங்கன், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.