என் மலர்
நீங்கள் தேடியது "அனைத்து கட்சி"
- தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவத்தை பொறுத்தவரை தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.
- தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.
கோவை:
கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவத்தை பொறுத்தவரை தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.
எதிர் முகாமில் உள்ள அ.தி.மு.க கட்சி பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருப்பதை அ.தி.மு.க.வின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.
பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கூறி விட்டு, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்போது மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் என அவர்கள் கேட்கின்றனர். எனவே அந்த கூட்டணியை வெல்லும் கூட்டணி என சொல்ல முடியாது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தேர்தலில் எந்த அளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அவர்கள் தனித்து நிற்பார்களா? அவர்கள் முடிவு என்ன என்று தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும்.
தமிழகத்தில் 1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான். தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க பெறக்கூடிய தொகுதிகளை வைத்து, காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுமா என்று கூற முடியாது. கூட்டணி தர்மம் என்று உள்ளது.
ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலை உள்ளது.
தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் பா.ஜ.க. கட்சி வலிமையாக உள்ளது. தேர்தலில் அவர்களை எதிர் கொள்வதற்கு இந்தியா கூட்டணியில் வலிமை தேவை என்ற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பல கேள்விகள் உள்ளன. அங்கே பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவேதான் பாராளுமன்ற கூட்டத்தில் இதுகுறித்த விவாதத்தின் போது பிரதமர் மற்றும் ராணுவ மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
தமிழக கவர்னர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார், தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கோவை ஹரிஹரன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஐ என்.டி எஸ். சி மாவட்ட பொறுப்பாளர் கோவை செல்வம், ராஜாமணி, சோபனா செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
- இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் வெள்ளி விழா பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவிலும், துறை சார்ந்த வகையிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை மாதம் பரப்புரை இயக்கம் நிறைவடைந்த பின்பு வெள்ளையனே வெளியேறு நாளான ஆகஸ்ட் 9-ந் தேதி மாநில அளவிலான திரள் அமர்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.
துறை சார்ந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தொடங்கி வேலை நிறுத்தம் வரை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அந்தத்துறைக்கு வெளியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து ஆதரவு வேண்டும்.மாநில அளவிலான பெருந்திரள் அமர்வு போராட்டத்திற்குப் பிறகு, அதன் அனுபவங்களை ஆய்வு செய்து, இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- இதில் செயல் அலுவலர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி தெருக்களின் நிலவரம் குறித்தும் கண்மாய் மற்றும் வர்த்தக பகுதிகளின் நிலவரம் குறித்தும் குறும்பட காட்சி காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் தூர்வாருதல், வரத்து கால்வாய்கள் பராமரிப்பு செய்தல், நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், நகரின் தூய்மை குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், நகரின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடுதல், தெருக்களில் சுற்றிதிரியும் நாய், மாடு, குரங்கு, பன்றி மற்றும் ஏனைய பிராணி களை கட்டுப்படுத்துதல், மயானங்கள் மற்றும் மக்கள் பயன்பாடு இடங்களை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், நாள்தோறும் விநியோகிக்கப்படும் தண்ணீரை மின் மோட்டார் கொண்டு உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துதல், மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டு வருதல், பாகுபாடின்றி நகரில் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் போன்ற பல்வேறு நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும், அதனை உடனடியாக செயல்படுத்துவது குறித்தும் அனைத்து தரப்பினரிடமும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டு அறியப்ப ட்டது.
இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.
- பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வழியாக பூலக் காட்டுப்பாளையம் பைபாஸ் வரையிலான சாலையின் நடுவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன .பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இதில் பயணிக்க வேண்டி உள்ளது.
சாலையில் தினமும் பலரும் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இது குறித்து பலமுறை நேரிலும் டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.தினமும் விபத்து நடக்கும் இச்சாலை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்ததக்கது.எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டுகிறோம் என அனைத்து கட்சியினர் இணைந்து கூட்டாக கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கட்சி கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, தொடர்பான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயன் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
- இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது.
அவிநாசி :
அவிநாசி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இதில் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), பெருமாள் (ம.தி.மு.க.,), ராசுவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ராஜ்குமார் (கொ.ம.தே.க.,),
இந்திய கம்யூனிஸ்டு சண்முகம், சுப்பிரமணியம், ஷாஜகான், செல்வராஜ், யாசின் பங்கேற்றனர்.காலை மற்றும் மாலையில் அவிநாசி அரசு பெண்கள் பள்ளி முன்பு மகளிர் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது. போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






