அவிநாசி பகுதியில் திருட்டை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் - அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

அவிநாசி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இதில் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), பெருமாள் (ம.தி.மு.க.,), ராசுவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ராஜ்குமார் (கொ.ம.தே.க.,),

இந்திய கம்யூனிஸ்டு சண்முகம், சுப்பிரமணியம், ஷாஜகான், செல்வராஜ், யாசின் பங்கேற்றனர்.காலை மற்றும் மாலையில் அவிநாசி அரசு பெண்கள் பள்ளி முன்பு மகளிர் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது. போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com