அவினாசி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை

திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வழியாக பூலக் காட்டுப்பாளையம் பைபாஸ் வரையிலான சாலையின் நடுவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன .பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இதில் பயணிக்க வேண்டி உள்ளது.

சாலையில் தினமும் பலரும் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இது குறித்து பலமுறை நேரிலும் டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.தினமும் விபத்து நடக்கும் இச்சாலை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்ததக்கது.எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டுகிறோம் என அனைத்து கட்சியினர் இணைந்து கூட்டாக கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com