என் மலர்

  நீங்கள் தேடியது "Karti Chidambaram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.
  • அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா.

  கார்த்திப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது :-

  அமலாக்கத்துறையால் கிடுக்கிப்பிடி அப்படி... இப்படி... என்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு 20 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது நேரத்தை வீணடிக்கவும், மன உளைச்சலை ஏற்படுத்தவும் தான். எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.

  அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா. அவ்வளவு தான். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
  • கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

  புதுடெல்லி :

  காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

  நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார்.
  • வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

  புதுடெல்லி:

  அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

  நாடு முழுவதும் காங்கிரசார் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமோ போராட்டங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது செயலை பலரும் விமர்சித்தனர்.

  இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்திருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி உள்ளே சென்ற ராகுல் காந்தி, கைகொடுக்க காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
  • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

  ராய்பூர்:

  சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

  மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

  "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
  • பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

  புதுடெல்லி

  பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

  அது வருமாறு:-

  கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

  கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.

  வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

  ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்தியில் பாரதிய ஜனதா அரசு சாதாரண மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது தான் அவர்களுடைய வழக்கம்.
  • தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

  கோவை:

  சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் பாதயாத்திரை தொடங்குகிறார். பொதுமக்களை நாடி செல்லும் எந்தவொரு முயற்சியும் கட்சிக்கு பலம் சேர்க்கும். முதலில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களை ஒரு அணியாக திரட்டி ஒரு பாதையில் செல்லும்போது அதுவே கட்சிக்கு வலுசேர்க்கும்.

  அதேவேளையில் பொதுமக்களை சந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பு. ராகுல்காந்தியின் பாதயாத்திரை கட்சிக்கு பலம் சேர்க்கும்.

  தமிழகத்தில் ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் அரசாங்கத்திலே எங்களுக்கு இடம் கிடையாது. ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் இடம் பெறாமலும், எதிர்க்கட்சியாகவும் எங்களால் செயல்பட முடியாது. இதுபோன்ற நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது யார் தலைவராக இருந்தாலும் எங்களுக்கு இந்த தர்ம சங்கடமான நிலை இருக்கத்தான் செய்யும்.

  மத்தியில் பாரதிய ஜனதா அரசு சாதாரண மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துக் கொண்டே செல்வது தான் அவர்களுடைய வழக்கம். அவர்களின் பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி, குழப்பமான ஜி.எஸ்.டியாக இருந்தாலும் சரி, பெட்ரோல் மீது வரி சுமத்துவதாக இருந்தாலும் சரி, தற்போது சுங்கச்சாவடியில் கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தாலும் சரி பொதுமக்கள் மீது வரியை அதிகரித்துக் கொண்டே தான் செல்வார்கள். இந்த பிரதமர் மற்றும் நிதி மந்திரி இருக்கும் வரை சாதாரண மக்களுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது.

  தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக செயல்படுகிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது.
  • கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  சென்னை:

  பஞ்சாப் மாநிலம், பனவாலா என்ற பகுதியில் வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். நிறுவனம் அமைத்து வந்த 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல்மின் நிலையத்தில், தொழில்நுட்ப பணிகளை சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.

  இப்பணிக்கு மேலும் தொழில் நுட்பப் பணியாளர்களை சீனாவில் இருந்து அழைத்து வருவதற்காக டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் துணைத் தலைவர் விகாஸ் மஹாரியா, கார்த்தி சிதம்பரத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாஸ்கர ராமனை அணுகினார்.

  இந்த முறைகேடு நிகழ்ந்த 2011-ம் ஆண்டு கால கட்டத்தில் கார்த்தியின் தந்தை சிதம்பரம் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தார்.

  விகாஸ் அந்த திட்டத்தில் பணி செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களை, அரசின் விதிமுறைகளை மீறி மறுசுழற்சி முறை அடிப்படையில் மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

  இதற்காக கார்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

  இதுகுறித்து டெல்லி சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கரராமன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது கூட்டுச் சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

  இந்த வழக்குத் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட 10 இடங்களில் டெல்லி சி.பி.ஐ. கடந்த மே 17-ந்தேதி சோதனை செய்தது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மே 18-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  இந்த நிலையில் சி.பி.ஐ. வழங்கிய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி அமலாக்கத்துறையினர் ஒரு வழக்கை கடந்த மே 25-ந்தேதி பதிவு செய்தனர். இதில் சி.பி.ஐ. வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த அனைவரும் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர்.

  இதையடுத்து இந்த வழக்குக்கான ஆதாரங்கள், தடயங்களை திரட்டும் வகையில் டெல்லி அமலாக்கத்துறையினர் சென்னையில் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் தொழில் அதிபர் ரமேஷ் துஹார் வீட்டிலும் நடைபெற்றது.

  இதே போல எழும்பூர் மார்ஷல் சாலையில் ரமேஷ் துஹார் நடத்தும் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட 3 நிறுவனங்களிலும், தியாகராய நகரில் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திலும், ஒரு வர்த்தக சங்கத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.

  பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறையினர் கூற மறுத்து விட்டனர்.

  சில ஆவணங்களில் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.
  புதுடெல்லி:

  விசா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. 

  ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது. முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 30ம்தேதிக்கு ஒத்திவைத்தது.

  அதன்படி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதுவரை கார்த்தியை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் தனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
  புதுடெல்லி:

  கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

  இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

  பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் 16 மணி நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

  இதற்கிடையே நேற்று காலை கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

  கார்த்தி சிதம்பரத்திடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இன்றும் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

  இதற்கிடையே விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவரை கைது செய்ய 30-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார். காலை டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்துக்கு அவர் நேரில் சென்றார்.

  கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  நான் முற்றிலும் சட்ட விரோதமான மற்றும் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு எந்த தொடர்பும் இல்லாத குற்றச்சாட்டில் சி.பி.ஐ. டெல்லியில் உள்ள எனது வீட்டில் சோதனை நடத்தியது.

  சோதனையின்போது சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் நான் உறுப்பினராக உள்ள தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தொடர்பாக மிகவும் ரகசியமான மறறும் முக்கியமாக எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், ஆவணங்களை கைப்பற்றினர்.

  ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளில் தலையிடும் சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஜனநாயக கோட்பாடுகளின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

  இந்த விவகாரம் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை அப்பாட்டமாக மீறுவதாகும். சபை உறுப்பினரை இலக்கு வைத்து மிரட்டுவது சிறபுரிமையை மீறிவதாகும்.

  பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க நினைக்கிறது.

  இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
  புதுடெல்லி:

  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.

  இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர  ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். 

  இன்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.  விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

  இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்ஜாமீன் மீதான அடுத்தகட்ட விசாரணை மே 30ம்தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.